புகழேந்தியின் இல்லத்திற்கு இன்று இரவு 9 :00 மணிக்கு வருகை தருகிறார் – முதலமைச்சர் ஸ்டாலின்..!

2 Min Read
முதல்வர் மு.க.ஸ்டாலின்

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடல்நலகுறைவால் இன்று காலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று முதலமைச்சர் வருவதாக கூறப்பட்ட நிலையில், சிதம்பரம் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு 9 :00 மணிக்கு அவரது இல்லத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

- Advertisement -
Ad imageAd image
திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார்

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி வயது (69) உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல் நலக்குறைவால் காலமானார்

அவருக்கு ஏற்கனவே கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் எம்.எல்.ஏ புகழேந்தி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு சிகிச்சை அளிக்க, சென்னையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு விழுப்புரம் விரைந்திருந்த நிலையில், அவர் காலமான செய்தி வெளியாகியிருக்கிறது.

திமுக

மேலும் 71 வயதான இவருக்கு கல்லீரல் பாதிப்பு காரணமாக சில நாள்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அண்மையில் தான் வீடு திரும்பியிருக்கிறார்.

நேற்று விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற முதல்வர் பிரசாரக் கூட்டத்திலும் புகழேந்தி கலந்து கொண்டிருந்தார்.

திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார்

அப்போது நிகழ்ச்சியிலேயே உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவர் உடனடியாக விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வருவதாக இன்று காலை தகவல்கள் வெளியாகின. சென்னையில் இருந்துமருத்துவர்கள் குழு விழுப்புரம் விரைந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார்

விழுப்புரம் அரசு மருத்துவமனை வாயிலில் ஏராளமான திமுகவினர் திரண்டுள்ளனர். அவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். விக்கிரவாண்டி எம்எல்ஏ திமுக மாவட்ட செயலாளர் நா புகழேந்தி உடல் விழுப்புரம் அறிவாலயத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

புகழேந்தியின் இல்லத்திற்கு நாளை வருகை தருகிறார் – முதலமைச்சர் ஸ்டாலின்

மேலும் இறந்த புகழேந்தியின் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் திமுக கட்சியினர் அஞ்சலி செலுத்த ஏதுவாக விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்துக்கு அவரது பூத உடல் கொண்டு சென்றுள்ளனர்.

Share This Article
Leave a review