சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
திமுக கூட்டணியில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.

அப்போது அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரும், சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் தனது வேட்பு மனுவை திருமாவளவன் தாக்கல் செய்தார்.

அவருடன் வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.