போர் நிறுத்தம் : புதிய திட்டத்தை சமர்ப்பித்த இஸ்ரேல் – ஜோ பைடன் அறிவிப்பு..!

1 Min Read

காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் மத்தியில் நடந்து வரும் போர் தாக்குதலை நிறுத்துவதற்கும், பயங்கரவாதக் குழுவால் பிடிக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் ஒரு “விரிவான புதிய திட்டத்தை” இஸ்ரேல் சமர்ப்பித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

- Advertisement -
Ad imageAd image

ஜோ பைடன் அறிவிப்பின் படி, கத்தார் ஹமாஸுக்கு இந்த புதிய திட்டத்தை அனுப்பியுள்ளதாகவும், போர் நிறுத்தத்தை நோக்கிய முடிவுகளை இதன் வாயிலாக எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். இஸ்ரேல் கொடுத்த திட்டத்தின் படி, இதன் ஆரம்பக் கட்டம் ஆறு வாரங்கள் நீடிக்கும்,

காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் போர்

காசாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இஸ்ரேலியப் படைகள் திரும்பப் பெறப்பட்டு முழுமையான போர் நிறுத்தம் செய்யப்பட்டு,

அதை தொடர்ந்து பெண்கள், முதியவர்கள், காயமடைந்தவர்கள் உட்பட பல பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதேவேளையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸ் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை இந்த மோதல் தொடரும் என தெரிவித்துள்ளார்.

காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் போர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பல நாட்களாக இஸ்ரேலின் மோசமான தாக்குதல் குறித்து எவ்விதமான கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை போர் நிறுத்தும் குறித்த அறிவிப்பு வந்த பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

சமீபத்தில் இஸ்ரேல் ராணுவப் படைகள் காசாவில் முக்கிய பகுதியாக இருக்கும் மத்திய ரஃபாவிற்குள் நுழைந்து அப்பகுதியைக் கைப்பற்றியது மட்டும் அல்லாமல் அங்கு பெரும் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் புகைப்படங்கள் உலக மக்களைக் கண்கலங்க வைத்தது.

காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் போர்

இந்த சம்பவம் நடந்த பின்பும் இஸ்ரேலுக்கு, அமெரிக்க ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்துவதற்கான வரம்பு எட்டப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a review