மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அப்புறப்படுத்த உத்தரவிட கோரி வழக்கு .!

1 Min Read
மதுரை மீனாட்சியம்மன் கோயில்

விதிமீறி கட்டியதாக 1869 கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன- அரசு தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டு .

- Advertisement -
Ad imageAd image

அவை எவ்வளவு பழமையானவை? முறையான கட்டிட வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பியதோடு, வரைபட அனுமதியை மாநகராட்சி வசம் ஒப்படைக்கவும், மாநகராட்சி அதிகாரிகள் அதனை சரிபார்த்து விதிமீறல்கள் இருப்பின் உரிய நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு.

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்:

அதில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் இருந்து 12 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டிடங்கள் கட்டக்கூடாது என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால் இந்த அரசாணையை மீறி பலர் கட்டிடங்களை கட்டியுள்ளனர். இதற்கு சட்டவிரோதமாக மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். இந்த கட்டிடங்களில் தரைத்தளத்துக்கு கீழும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி உயர விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில்

மதுரை மாநகராட்சி தரப்பில், ” விதிமீறி கட்டியதாக 1869 கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “அவை எவ்வளவு பழமையானவை? முறையான கட்டிட வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பியதோடு, வரைபட அனுமதியை மாநகராட்சி வசம் ஒப்படைக்கவும், மாநகராட்சி அதிகாரிகள் அதனை சரிபார்த்து விதிமீறல்கள் இருப்பின் உரிய நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Share This Article
Leave a review