கூகுளில் ஆபாச விளம்பரங்களுக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் மத்திய அரசு, கூகுள் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூகுள் இணையத்தில் ஆபாச வலைத்தளங்களுக்கான பரிந்துரைகள் வருவதற்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஞானேஸ்வரன் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
கூகுள் தளத்தில் ஆபாச விளம்பரங்கள் அதிகம் இடம்பெறுவதாகவும் இதை பார்க்கும் குழந்தைகள் மனம் கெட்டுப்போக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே கூகுள் தளத்தில் ஆபாச விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்த மனுவில், இணைய பயன்பாட்டாளர்கள் கூகுள் தேடுதலில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்து சில தனியார் நிறுவனங்கள் தங்களது விளம்பரத்தை பிரபலபடுத்தும் வசதியை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. இதை சில தவறான நபர்கள் ஆபாச இணையதளங்களுக்கான பரிந்துரைகளை விளம்பரப்படுத்துகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஞானேஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ’கூகுள் தளத்தில் சில நபர்கள் ஆபாச இணையதளங்களுக்கு விளம்பரம் செய்கின்றனர். இந்த விளம்பரங்கள் காரணமாக இணையதளத்தை பயன்படுத்தும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மன பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
விளம்பரத்தில் உள்ள ஆபாச புகைப்படங்கள் இளைஞர்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும் அபாயம் உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி கூகுள் நிறுவனம், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஆகியோர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இது குறித்து இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
இந்த ஆபாச புகைப்படங்கள் கொண்ட விளம்பரங்கள் இணையதளத்தை பயன்படுத்துவோருக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்துகிறது எனவும், குழந்தைகள் தவறான பாதைக்கு செல்லும் அபாயம் உள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, கூகுள் நிறுவனமும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சகம் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.