கடலூர் அருகே மிரட்டும் பேயால் அந்த பகுதி கிராமமக்கள் அலறுகின்றனர். அப்போது பேயால் பாதிக்கப்பட்ட இளைஞர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நவீன அறிவியல் வசதிகள் நிறைந்த இந்த காலத்தில் பேய் நடமாட்டமா? இல்லவே இல்லை என கூறுபவர்கள் நகரத்தில் வாழும் மக்கள் பேய் இருப்பதாக கிராமமக்கள் மத்தியில் இன்னும் நம்பப்படுகிறது. ஆனால் பேய் போன்று எதுவும் இல்லை. ஆன்மா மட்டுமே உண்டு.

அதுவும் தற்கொலை, கொலை, விபத்தில் திடீரென உயிர் மாய்க்கும் மனிதனின் ஆன்மா மட்டும் தான் தவிக்கும். மேலும் சில நேரங்களில் அப்பகுதியில் சுற்றி வரும் என மாந்திரீகம் செய்பவர்கள் கூறுவார்கள்.
எது எப்படியோ தமிழகத்தில் பேய் படங்கள் வெளியாகும் போது வசூலில் புதிய சாதனை படைக்க தான் செய்கிறது. சந்திரமுகி, காஞ்னா போன்ற பல படங்கள் ஹிட்டானது.

பின்பு வழக்கமாக பல ஆசைகளுடன் வாழ்பவன், திடீரென உயிரிழந்தால் அந்த பகுதியில் பேயாக சுற்றி வருவான் என கிராமத்தில் வாழும் பெரியவர்கள் தற்போதும் கூறுவார்கள்.
இதற்காக பல எடுத்துக்காட்டுகளை கூறி, தனது பேரப்பிள்ளைகள் இரவில் சுற்றாமல் வீட்டியிலேயே தங்க வைக்க இதுபோன்ற கதைகளை கூறுவதும் உண்டு. அதன் குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களால் அந்த பகுதியில் பேய் நடமாட்டம் இருக்கும் என கூறுவதும் உண்டு.

நெடுஞ்சாலையில் ஒரு சில வளைவுகளில் அடிக்கடி விபத்து நடப்பதால் பேஸ் வளைவு என கூறுவார்கள். அப்போது பைக் மற்றும் கார், லாரியில் போகும் போது திடீரென ஒரு நிழல் கிராஸ் ஆகும். இதனால் விபத்து நடப்பதும் உண்டு.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு திண்டிவனம் அருகே இப்படி பரபரப்பு நீண்ட நாளாக இருந்தது உண்டு. இப்படி தான் கடந்த இரு தினங் களுக்கு முன் கடலூர் அருகே உள்ள வானமாதேவி கிராமத்தை சேர்ந்த இளைஞர், தனது தம்பி, சகோதரியுடன் கடலூரில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்துக்கு வந்து விட்டு வீடு திரும்பி உள்ளனர்.

அப்போது நள்ளிரவில் வீடு திரும்பியவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. நடுவீரப்பட்டுக்கும், விளங்கல்பட்டுக்கும் இடையே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த போது ஒரு பெரிய நிழல் போன்ற உருவம் தெரிந்துள்ளது. அப்போது யாரோ சாலையை கடப்பதாக கருதி அந்த இளைஞர் பைக்கை நிறுத்தி உள்ளார்.
அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த அவரது தம்பி, கையில் வைத்திருந்த செல்போனால் போட்டோ எடுத்து உள்ளான். அப்போது அது பேய் போன்ற உருவத்தில் இருந்ததால் அலறினார். உடனே அனைவரும் வந்த வழியாக திரும்பி கடலூருக்கு சென்று விட்டனர். பின்னர் பொழுது விடிந்ததும் வேறு வழியாக வீடு திரும்பினர்.

அப்போது இரவு நேரம் என்பதால் குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூறினால் பயம் ஏற்படும் என்பதால் எதுவும் கூறாமல் வீட்டுக்கு திரும்பி உள்ளனர். ஆனால் அதற்கான படங்களை உறவினர்களிடம் காட்டி உள்ளனர். இந்த படங்கள் அந்த பகுதியில் வைரலாக பரவி வருகிறது.
இதற்கிடையே பைக்கை ஓட்டிய இளைஞருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால் அருகில் உள்ள அம்மன் கோயில்களில் இருந்து பூஜை செய்யப்பட்ட கயிறுகளை கட்டினர். ஆனாலும் காய்ச்சல் குறையவில்லை. இதனால் உடனே கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

கடலூர் அரசு மருத்துவமனை
அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இளைஞரின் சகோதரி கூறுகையில் பேய் இருப்பதாக பலர் கூறி கேள்விப்பட்டேன். ஆனால் நேரில் பார்த்த போது எங்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது.
கடலூரில் இருந்து ஊருக்கு திரும்பிய போது வழியில் பயங்கரமான உருவம் நின்றதால் வந்த வழியாக திரும்பி வந்துவிட்டோம். மேலும் நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

எனது தம்பி கடும் காய்ச்சலால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான், என்றார். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் வைரலாக பரவி வருவதால் கிராமமக்கள் அச்சத்தில் உள்ளனர்.