திருச்சி விமான நிலையத்தில் விரைவில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாகவும், 4 இடங்களில் இந்த வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் முகநூல் வழியாக ஒருவர் தகவலை பரப்பியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இவை தவிர உள்நாட்டு விமான சேவைகளாக ஐதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களை பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை முகநூல் பகுதியில் தனிநபர் ஒருவர் திருச்சி விமான நிலையத்தில் விரைவில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாகவும், 4 இடங்களில் இந்த வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் தகவல் அனுப்பியதாக தெரிகிறது.

இதனை அறிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர் குழுவினர் உடனடியாக விமான நிலையத்திற்கு வருகை தந்து சோதனை செய்து வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்
பயணிகளின் வாகனங்கள் மற்றும் உடைமைகள் தீவிர சோதனைக்கு பின்பு உள்ளே அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பாக தகவல் அறிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக விமான நிலையத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை
மோப்ப நாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் உதவியுடன் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் மர்ம பொருட்கள் எதுவும் கிடைக்காததால், இந்த மிரட்டல் புரளியாக இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனால் திருச்சி விமான நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.