வாக்கு சேகரிக்க சென்ற பாஜகவினர் – கற்களை வீசிய முஸ்லிம் இளைஞர்..!

1 Min Read

வாக்கு சேகரிக்க சென்ற பாஜகவினர் மீது கற்களை வீசிய முஸ்லிம் இளைஞர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு.

- Advertisement -
Ad imageAd image

கோவை மாநகரம், கண்ணப்பா நகர் அருகே உள்ள சண்முகா நகருக்கு பாஜக பிரமுகர் அர்ஜுனன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர், நேற்றிரவு அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்றுள்ளனர்.

வாக்கு சேகரிக்க சென்ற பாஜகவினர் – கற்களை வீசிய முஸ்லிம் இளைஞர்

அப்போது, கண்ணப்பா நகரைச் சேர்ந்த நௌசத் வயது (18) என்பவர் குடிபோதையில் இருந்துள்ளார். எங்கள் பகுதிக்கு எதுக்கு, வாக்கு சேகரிக்க வருகிறீர்கள் என கேட்டு, பாஜகவினர் மீது, அவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்.

அதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் லேசான காயம் அடைந்தனர், பிரபு என்பவர், சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கவுண்டம்பாளையம் போலீசார்

தனது பகுதிக்குள் பிரச்சாரத்திற்கு அனுமதிக்க மாட்டேன் என்று பாஜகவினரிடம் அந்த இளைஞர் கூறியுள்ளார்.பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நெளசாத் என்ற இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

சிறையிலடைப்பு

பின்னர் போலீசார் விசாரணையில் அவர், பிசி ஏ முதலாமாண்டு படித்து வருவதாகவும், பாஜகவினர் மீது கல்வீசியதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Share This Article
Leave a review