நாடாளுமன்ற மக்களவையில் பேசிய எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி, அனைத்து மதங்களும் அகிம்சையை போதிக்கின்றன. வன்முறைக்கு இடமில்லை என்று கூறியிருந்தார்.

இதனை அடுத்து குஜராத்தின் அகமதபாத்தில் நடந்த போராட்டத்தின் போது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்திக்கொண்டனர். இந்த நிலையில் ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில்;-

குஜராத் காங்கிரஸ் அலுவலகம் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமாக மற்றும் வன்முறை தாக்குதல் பாஜக மற்றும் சங்பரிவால் குறித்த எனது கருத்துக்களை மேலும் வலுப்படுத்துகின்றது.

வன்முறையையும், வெறுப்பையும் பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை. பாஜக அரசுக்கு மக்கள் ஒரு தீர்க்கமான பாடத்தை புகட்டுவார்கள். நான் மீண்டும் சொல்கிறேன். குஜராத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெறப்போகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.