தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பின்னடைவு..!

3 Min Read

தென்சென்னை தொகுதியில் எண்ணப்பட்டு வரும் தபால் வாக்குகளில், பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் பின்னடைவை சந்தித்து வருகிறார். பெருவாரியான தேர்தல் கணிப்புகளில் கூறியிருந்தபடியே, திமுகவே முன்னிலை வகித்து வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

இந்த முறை திமுக சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன், அதிமுக சார்பில் ஜெயவர்த்தன், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்ச்செல்வி ஆகியோர் களம் கண்டுள்ளனர்.

திமுகவின் பாரம்பரியமான தொகுதியாக கருதப்படும் இந்த தென்சென்னையில், இந்த முறையும் தமிழச்சி தங்க பாண்டியனே களமிறங்கியிருக்கிறார். கடந்த முறை போல அல்லாமல், அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக களமிறங்கியிருப்பதும் திமுகவுக்கு சாதகமாக பார்க்கப்பட்டு வருகிறது.

மக்களவை தேர்தல்

இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு நடுவில், கடந்த முறை தேர்தலில் திடீரென என்ட்ரி தந்து, 1,36,645 வாக்குகளை பெற்றிருந்தது மக்கள் நீதி மய்யம்.

இந்த முறை திமுகவுடன் மய்யம் ஐக்கியமாகியிருப்பதால், பெருத்த லாபம் திமுக கூட்டணிக்கே கிடைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறி வருகிறார்கள். அதிமுகவுக்கும் இந்த தென்சென்னை தொகுதியானது சாதகமானதாகவே நம்பப்படடு வருகிறது.

இந்த முறையும் மூத்த தலைவர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனே களம் கண்டுள்ளார். பாஜகவை பொறுத்தவரை, இந்த தென்சென்னையில் மிகுந்த நம்பிக்கையை வைத்திருக்கிறது. காரணம், பிராமண சமூகத்தின் வாக்குகளையே பிரதானமாக நம்பியிருக்கிறது.

பாஜக

ஏனென்றால், கடந்த முறை தேர்தலில், மூத்த தலைவர் இல.கணேசன் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார். கடந்த 2019-லேயே தமிழிசையே இங்கு தென்சென்னையில் போட்டியிட விருப்பப்பட்டார்.

இப்போதுகூட, ஆளுநர் பதவியையே ராஜினாமா செய்து விட்டு, டாக்டர் தமிழிசை சவுந்தராஜன் இங்கு போட்டியிட்டுள்ளார். அந்தவகையில், திமுக, அதிமுகவை வென்றாக வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு இங்கு ஏற்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட “மினி” கோவை தெற்கு தொகுதி போலவே, தென்சென்னையும் பாஜக, மநீம கட்சிகளுக்கு அமைய போவதாக கணிப்புகள் கூறிவருகின்றன. அதேபோல, திமுக கூட்டணி, பாஜக என இரு தரப்பையும் சமாளிக்க வேண்டிய நெருக்கடியும், கட்டாயமும் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

திமுக , தமிழிசை சவுந்தரராஜன்

2 நாட்களுக்கு முன்புவந்த எக்ஸிட் போல் முடிவுகளில் கூட, திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 37 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என்றும், 2வது இடத்தை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 27 சதவீத வாக்குகளுடன் பெறுவார் என்றும்,

பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன் 19 சதவீத வாக்குகளையே பெறுவார் என்றும் தந்தி டிவியின் கணிப்புகள் கூறியிருந்தன. பாஜகவுக்கு எதிராக களம் இருப்பதாக சொன்னாலும், 5 ஆண்டுகளுக்கு 365 நாட்கள் என்ற கணக்கில், 1825 நாட்களும் மக்கள் பணியாற்றுவேன் என்ற உறுதிமொழியுடன்,

‘அக்கா 1825’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை தமிழிசை வெளியிட்டிருந்தது தொகுதி மக்களின் கவனத்தை திருப்பியிருந்ததை மறுக்க முடியாது. மொத்தத்தில், தென்சென்னையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை அதிமுக, பாஜக, திமுக என 3 கட்சிகளுமே ஏற்படுத்திய நிலையில்,

தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பின்னடைவு

இன்று காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், ஆரம்பத்திலேயே திமுக முன்னிலை பெற்று வருகிறது. தமிழச்சி தங்கபாண்டியன் தபால் வாக்குகளில் முன்னிலை பெற்று வருகிறார். இந்த தொகுதியை பாஜக மிகவும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது பின்னடைவை சந்தித்து வருகிறது.

இதில், 2வது இடத்தை பெறும் என்று யூகிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். காலை 10.30 மணி நிலவரப்படி, தமிழச்சி தங்கபாண்டியன், மொத்தம் 12507 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பின்னடைவு

தற்போது 2 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 79,639 வாக்குகளை பெற்று முதன்மையான இடத்தையே தக்க வைத்துள்ளார். பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் 50,713 வாக்குகளை பெற்று 2வது இடத்திலேயே உள்ளார்.

3வது இடத்தில், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் உள்ளார். அதன்படி, இவர் 25,864 வாக்குகளை பெற்றுள்ளார்.. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால், இந்த நிலவரம் மாறும் என்றே தெரிகிறது.

Share This Article
Leave a review