தாய்லாந்து : நெருங்கிய தோழி , காதலன் உற்பட 12 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த கர்பிணி

2 Min Read
சரரத் ரங்சிவுதபோர்ன

தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் சிரிபோர்ன் கான்வோங் இவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது தோழியுடன் ராட்சபுரி மாகாணத்திலுள்ள புத்த விகாருக்கு வழிபடச் சென்றுள்ளார் . வழிபாட்டை முடித்துவிட்டுத் திரும்பும் போது சிரிபோர்ன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார் .

- Advertisement -
Ad imageAd image

அங்குப் புத்த தரிசனம் காண வந்த பக்தர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் , பின்பு உடனடியாக சிரிபோரனை அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர் .

மேலும் சிரிபோரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர் . அவரது உடற்கூராய்வு முடிவில் சிரிபோரானுக்கு சயனைடு கொடுத்து கொலை செய்திருப்பது தெரியவந்தது .

இதுகுறித்து பாங்காக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது  . மருத்துவமனை ஊழியர்கள்  அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல் துறையினர் சிரிபோர்ன் காண்வோங்கை மருத்துவமனையில் அனுமதிக்கும்பொழுது அவருடன் தோழி ஒருவர் இருந்தார் என்பதும் , அவர் இறந்த பிறகு அந்த பெண்மணி சிரிபோர்னின் தொலைப்பேசி, பணம், பை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார் என்பதும் காவல்துறைக்குத் தெரியவந்தது .

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண் பாங்காங்கைச் சேர்ந்த சரரத் ரங்சிவுதபோர்ன் (32) என்பதும்  சிரிபோர்ன் கான்வாங்யை சயனைடு கொடுத்து கொலை செய்ததும் அவர் தான் என்பதை போலீசார் விசாரணையில் கண்டறிந்தனர் .
இது குறித்துப் பேசிய இந்த வழக்கின் விசாரணை அதிகாரி “குற்றம்சாட்டப்பட்ட பெண் தற்பொழுது கர்ப்பமாக உள்ளார் மேலும் இவர் கடந்த 3 வருடங்களில் அவருடைய முன்னாள் காதலன் உற்பட 12 பேரை இதே பாணியில் சயனைடு கொடுத்து கொலை செய்துள்ளார் .

முதற்கட்ட விசாரணையில் குற்றவாளி சரத்தின் நண்பர் ஒருவர் இறந்ததற்குப் பழிவாங்கவே இவர் தொடர் கொலையில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிய வருகிறது . இருப்பினும் சரரத்துக்கு மனநிலை சார்ந்த பிரச்சனை இருக்கக் கூடுமோ என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார் . கர்பிணி பெண் ஒருவர் 12 கும் மேற்போட்டரை கொலை செய்த சம்பவம் தாய்லாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Share This Article
Leave a review