இ வேஸ்ட் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் 5 பொருட்கள்- விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கபட உள்ளது.

0
34
இ_வேஸ்ட்

கழிவுப்பொருட்கள் தானே என்று நாம் சும்மா போட்டுவிடுவோம்.அவற்றையெல்லாம் சேகரித்து நாம் போட்ட கழிவுகளா இவை என வியக்கும் வகையில் சில பொருட்களை ஒரு தனியார் நிறுவனம்  ஒன்று சேர்த்து அழகிய காட்சிப்பொருட்களாக்கி வருகிறது.அவை இன்னும் கொஞ்ச நாளில் அனைவருக்கும் செல்பி எடுக்கும் அடையாளமாகப்போகிறது.

அடிக்கும்குழாய் கார்

இ.வேஸ்ட் எனப்படும் எலக்ட்ரானிகாஸ் கழிவுப்பொருட்கள்.அதாவது கணனி மென்பொருட்கள்,பயன்படுத்தப்பட்ட இரும்பு கழிவுகள் ஆகியை கொண்டுதான் இந்த பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் உள்ள குளங்கள் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகியவை தற்போது பொதுமக்கள் அதிகபட்ச பொழுதுபோக்கு இடமாக மாறி உள்ளது. இந்நிலையில் அதனை மேலும் மேம்படுத்தும் வகையிலும் அழகு சேர்க்கும் வகையிலும் எலக்ட்ரானிக் கழிவுகளை கொண்டு காட்சி பொருட்கள் வைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் தற்போது முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது.

கிராம போன்

உக்கடம் பெரியகுளம் குளக்கரையில் எலக்டிரானிக் கழிவு என்று அழைக்கப்படும் இ வேஸ்ட் கொண்டு 5 பொம்மை பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. வெள்ளலுார் மற்றும் பாரதி பார்க் குப்பை கிடங்கில் இருந்து சேகரிக்கப்பட்ட கணினியின் கீ போர்டு, மவுஸ் மற்றும் பல்வேறு பொருட்களை கொண்டு இந்த பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கிராமா போன், தொலைப்பேசி, கைபம்பு, கார் போன்ற பிரமாண்ட பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

இது கோவை மக்களின் அடுத்த செல்பி பாயிண்டாக விரைவில் உருவெடுக்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here