விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வறட்சியை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீர் ஆதாரங்கள் போதுமானதாக இருக்கிறதா என்று சம்மந்தப்பட்டதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆட்சியர் இதுகுறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நீர் மேலாண்மை குழு கூட்டம் ஆட்சியர் பழனி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அவர் கூறியதாவது:-

எதிர்வரும் கோடை வறட்சியை எதிர்கொள்ள வேண்டிய அனைத்து முன்னேற்பாடு பணிகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான திட்டம் தயார் செய்வது குறித்து விரிவாக துறை சார்ந்த அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.
மேலும், ஒவ்வொரு பகுதியிலும், தற்போது உள்ள குடிநீர் ஆதாரங்கள் மற்றும் தண்ணீர் இருப்பு போதுமானதாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து, போதுமானதாக இல்லை என்பது தொடர்பாக அந்த பகுதிகளுக்கு புதிய திட்டம் தயார் செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளபடும்.

இதுகுறித்தும், மாற்று ஏற்பாடாக டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தற்போது நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை உரிய காலத்தில் சுத்தம் செய்திடவும்.

அப்போது குலோரினேஷன் செய்து சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஏரி, குளங்கள் மற்றும் கண்மாய்களில் உள்ள நீர் ஆதாரத்தை முறையாக பாதுகாத்திடவும்,விவசாயிகளுக்கு சிக்கமான முறையில் நீர் ஆதாரத்தை பயன்படுத்தி விவசாய பணிகள் மேற்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.