அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து சமரசம்..!

3 Min Read

தமிழகத்தில் போட்டியிட்ட 19 தொகுதிகளிலும் பாஜக தோல்வியடைந்தது. தேர்தல் தோல்விக்கு பிறகு முன்னாள் மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், அண்ணாமலையும் தோல்விக்கு யார் காரணம் என கடுமையாக மோதிக்கொண்டனர்.

- Advertisement -
Ad imageAd image

இதனால் இருவரின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இது பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து டெல்லி சென்ற பாஜக தலைவர் அண்ணமலையை மேலிடம் கடுமையாக எச்சரித்தது. ஒழுங்காக கட்சி பணியை பாருங்கள்.

தேவையில்லாமல் பேசக்கூடாது என வாய்ப்பூட்டு போட்டது. இல்லாவிட்டால் தலைவர் பதவியில் இருந்து மாற்ற நேரிடும் என்று எச்சரித்தது. இதை அடுத்து டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய அண்ணாமலை, இனிமேல் ஏர்போர்ட்டில் எந்த பேட்டியும் கொடுக்க மாட்டேன்.

பாஜக

பேட்டி கொடுக்க வேண்டும் என்றால் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தான் பேட்டி கொடுப்பேன் என்று அறிவித்தார். அதை தொடர்ந்து, இதுவரை அவர் பேட்டி எதுவும் கொடுக்கவில்லை.

இந்த நிலையில், ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்கும் விழாவில் கலந்து கொண்ட தமிழிசை சவுந்தரராஜனை, அமித்ஷா அழைத்துப் பேசினார். அப்போது, தமிழிசையை அமித்ஷா கண்டித்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது.

இதற்கு பல்வேறு மகளிர் அமைப்பினர், நாடார் சமுதாயத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சர்ச்சைக்கு பிறகு பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்தார். இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்தது.

அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து சமரசம்

அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும் என்ற டெல்லி மேலிடத்தின் எச்சரிக்கையை தொடர்ந்தே அண்ணாமலை தமிழிசையை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் சர்ச்சை வெடித்தால் எங்கே மாநில தலைவர் பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே தமிழிசையை சமாதானப்படுத்தும் வகையில் திடீரென அண்ணாமலை நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் தனது ஐடி விங்கினர் தமிழிசையை தவறாக சித்தரித்து பேசியதற்காகவும் மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தலைமை சொன்னதால் தான் அதிமுக கூட்டணியை நாங்கள் விரும்பவில்லை.

அண்ணாமலை

அதனால் தான் கூட்டணியில் இருந்து வெளியேறினோம். அதனாலேயே நானும் அப்படி நடந்து கொண்டேன். அதை நீங்கள் பொதுவெளியில் பேசியதால் தான் அமித்ஷா உங்களை கண்டிக்க வேண்டியதாயிற்று. உங்களுக்கு முக்கிய பொறுப்பு காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பதிவில், தமிழக பாஜக மாநில தலைவராக திறம்பட செயல்பட்டவருமான அக்கா தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.

தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காக கடினமாக உழைத்த அக்கா தமிழிசை சவுந்தரராஜன் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தை தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன்

அண்ணாமலையின் பதிவை பகிர்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன், ‘தமிழக பாஜக மாநில தலைவர் அன்புத்தம்பி அண்ணாமலை சந்தித்ததில் மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அண்ணாமலை தன்னை எதிர்த்த யாரையும் விட்டு வைத்ததில்லை. இதனால் தற்போது பதுங்குகிறவர் பாய்வதற்குதான். அவரிடம் உஷாராக இருங்கள் என்று தமிழிசையை அவரது ஆதரவு நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.

Share This Article

Leave a Reply