அண்ணாமலை, எல். முருகன் செய்தியாளர் சந்திப்பு – நடந்தது என்ன..!

2 Min Read

தற்போது 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி வளர்ச்சி நிதியாக தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கி இருப்பதாகவும், இதனால் தமிழகத்தின் உட்கட்டமைப்பு அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image
அண்ணாமலை, எல். முருகன்

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று பிற்பகல் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அண்ணாமலை, எல். முருகன் செய்தியாளர் சந்திப்பு

இதை அடுத்து, இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை தலைமையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு வரவேற்பு. கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை தலைமையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அண்ணாமலை, எல். முருகன் செய்தியாளர் சந்திப்பு

அண்ணாமலை பேசும் போது;- தற்போது 8.5 கோடி தமிழ் மக்களின் இணைப்பு பாலமாக எல்.முருகன் இருப்பார். அவருக்கு பொறுப்பு வழங்கிய பிரதமருக்கு நன்றி. அடுத்த 6 ஆண்டுகளில் தமிழகத்திற்கு வரவேண்டிய வளர்ச்சி திட்டங்களுக்கு உறுதுணையாக எல்.முருகன் இருப்பார். கடந்த முறை உறுப்பினராக இருந்த போதும் இவருடைய பணிகள் மிகவும் முக்கியமானவை.

அண்ணாமலை, எல். முருகன் செய்தியாளர் சந்திப்பு

அப்போது 2 துறைகளை செயல்படுத்தி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக கொண்டு சென்றார் என்றார். மேலும், நடிகை திரிஷா குறித்த அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் கிடையாது. காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து திட்டங்களுக்கும் தலைவர்களின் பெயர்களை வைப்பது நல்ல ஆட்சிக்கு உதாரணமாக இருக்காது. கோவைக்கு வரும் ரயில்கள் ரத்து செய்யப்படவில்லை. பின்பு ரயில்கள் வரும் போது கூடுதல் டிராபிக் ஏற்படுவதால் அருகில் உள்ள போத்தனூர் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது.

அண்ணாமலை, எல். முருகன் செய்தியாளர் சந்திப்பு

கோவைக்கு வந்தே பாரத் ரயில் போல புல்லட் ரயிலும் வரலாம் என்றார். இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்;

தமிழகத்தில் இருந்து பிரதிநிதித்துவம் வேண்டும் என்கிற அடிப்படையில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக இணைப்பு பாலமாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இது தமிழக மக்கள் மீது பிரதமர் வைத்திருக்கும் மரியாதையை காட்டுகிறது.

அண்ணாமலை, எல். முருகன் செய்தியாளர் சந்திப்பு

தமிழகத்திற்கு 11 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அப்போது மத்திய அரசு சார்பில் தமிழகத்தின் உள்கட்டமைப்புகள் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a review