கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அதன்படி, ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கோவையில் இன்று இறுதி கட்ட தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று காலை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சார பயணத்தை துவங்கிய அண்ணாமலை, கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அப்போது திறந்த வெளி வாகனத்தில் நின்றவாறு பொதுமக்களிடம் அண்ணாமலை தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். அவரோடு பாஜக முக்கிய நிர்வாகிகள் பலர் இந்த பிரச்சார பயணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஊரகப் பகுதிகளில் பிரச்சார பயணத்தை நிறைவு செய்துள்ள அண்ணாமலை, இன்று கோவை நகரப் பகுதி உட்பட சுமார் 90 இடங்களில் வாகன பயணமாக சென்று வாக்கு சேகரிக்கிறார்.