ஆவடி ரயில் , நிலையம் அருகே லோக்கல் மின்சார ரயில் நான்கு பெட்டிகள் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு.
சென்னை ஆவடி ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக தடம் புரண்ட 4 ரயில் பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் ஆவடியில் மின்சார ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.
இந்த மின்சார ரயில் அண்ணனூர் ரயில்வே பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதியான ஆவடி ரயில் நிலையம் அருகே லோக்கல் மின்சார ரயில் வழக்கம் போல் செயல்பட்டு கொண்டிருந்தது.அப்போது அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையம் வந்து கடற்கரை ரயில் நிலையத்துக்கு செல்வது வழக்கம்.

இன்று வழக்கம் போல் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையம் வந்து கொண்டிருக்கும் பொழுது ரயில் நிலையத்தில் ரயில் நிக்காமல் இந்து கல்லூரி நோக்கி சென்ற பொழுது ரயில் டிராக் மாற்றப்பட்டு இருந்ததால் ரயில் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டது.
அதிர்ஷ்டவசமாக தடம் புரண்ட ரயில் 4 பெட்டிகளில் பயணிகள் இல்லாததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரயில்வே ஊழியர்கள் மூலம் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சீர் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தகவல் அறிந்து ரயில்வே கோட்ட மேலாளர் டி.ஆர்.எம் வினோத் என்பவர், விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்து வருகிறார். பணிமனையில் இருந்து வந்த ரயிலினால் பயணிகள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்தத் தடம் புரண்டதால் 3 மணி நேரத்திற்கு மேல் மின்சார வையுங்கள் தாமதமாக சென்று கொண்டு இருக்கிறது.

மேலும் பனிமூட்டம் காரணமாக இந்த ரயில் விபத்து ஏற்பட்டதா? அல்லது ரயில் ஓட்டுனர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதா? என ஆவடி ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர்.இந்த விபத்து காரணமாக சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரயில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆவடி அண்ணனூர் மார்க்கத்தில் செல்லும் விரைவு ரயில்களும், மைசூர் செல்லும் வந்தே பாரத் ரயிலும், திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலும், பெங்களூர் செல்லும் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயிலும், கோவை எக்ஸ்பிரஸ் ரயிலும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.