ஓரினசேர்க்கைக்கு மறுத்த 8 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஓரினச்சேர்க்கை உறவு சட்டத்திற்குப் புறம்பானதல்ல என்று நீதிமன்றங்கள் சொல்லி விட்டன. மக்களும் மெதுவாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கி விட்டார்கள் என்பது ஒருபுறம் இருக்க தாங்கள் கூறியது போல் அது ஒரு பழக்கம் தான் என்பது சரியான கணிப்பு. பல நேரங்களில் விடுதி நண்பர்கள் சில நேரங்களில் வீடுகளிலேயே இத்தகைய பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் பின்வருமாறு;-

தூத்துக்குடி மாவட்டம், அடுத்த வேம்பாரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களது மகன் அஸ்வின்குமார் வயது (8), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் காய்ச்சல் காரணமாக அஸ்வின்குமார் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தான். அவரது தாயார் மகளை பள்ளியில் விடச்சென்றிருந்த நிலையில், வீட்டின் முன்புறம் அஸ்வின்குமார் விழுந்து கிடந்தான்.
இதைப் பார்த்த அப்பகுதியினர், பெற்றோர் சிறுவனை தூக்கிப் பார்த்த போது கழுத்தில் ரத்தக்காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை கண்ட பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அஸ்வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழிகளில் சிறுவன் இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.

இறந்த சிறுவனின் கழுத்தில் கத்திக்குத்து விழுந்த காயம் போல் இருப்பதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கிய எட்வர்ட் கென்னடி மகன் தாமஸ் என்ற ரகசியம் வயது (19) என்பவரை போலீசார் பிடித்தனர். இந்த தீவிர விசாரணையில் அவர், சிறுவனை குத்திக் கொன்றது தெரியவந்தது.
அவர் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் கூறியதாவது;- தாமஸ் என்ற ரகசியம் என்பவர் மது உள்ளிட்ட பழக்கங்களுக்கு அடிமையான நான், சம்பவத்தன்று அஸ்வின்குமார் வீட்டில் தனியாக இருப்பதை பார்த்து சென்றேன். அவனை தகாத உறவுக்கு அழைத்து வற்புறுத்தினேன். ஆனால் அஸ்வின் மறுத்து கூச்சலிட்டான். இதனால் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த காய் நறுக்கும் கத்தியை எடுத்து அஸ்வின் கழுத்தில் குத்தி விட்டு தப்பிச் சென்றேன். இவ்வாறு கூறியுள்ளான். இதனை அடுத்து, தாமசை போலீசார் கைது செய்தனர்.