பாஜக என்ற முதலாளியின் சொல்லிற்கு அதிமுக கட்டுப்படுகிறது – போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்..!

2 Min Read

விக்கிரவாண்டி அருகே உள்ள முண்டியம்பாக்கத்தில் திமுக சார்பில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர்கள் சிவசங்கர் பொன்முடி, எம்.பி ஜெகத்ரட்சகன் தலைமையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து பேட்டியளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்;-

- Advertisement -
Ad imageAd image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பொறுத்தவரை மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பது அதிமுகவே வெளிபடுத்தி இருப்பதாகவும்,

அதிமுகவின் பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி அதிமுக போட்டியிடாது என கூறியிருப்பதற்கு காரணம் மக்கள் திமுகவிற்கு வாக்களிபார்கள் என்ற காரணத்திற்காக அதிமுக பின்வாங்கி உள்ளதாக கூறினார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்

திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவின் வெற்றி வாய்ப்பு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரகாசமாக உள்ளதாகவும் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அனைத்து சமுதாயத்தினருக்கும் அரனான இயக்கமாக திமுக உள்ளதாகவும், திமுகவின் சிந்தாந்தம் தான் இந்தியாவிற்கே வழிகாட்டும் சிந்தாந்த இயக்கமாக உள்ளதாகவும், அது இடைத்தேர்தலில் பிரதிபலிக்கும் என்றும்,

பாஜக

சாதி ரீதியான, மத ரீதியான பிரிவினைகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை நாடாளுமன்ற தேர்தலிலையே மக்கள் காட்டி விட்டதாக கூறினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தமிழகத்தில் 39 தொகுதிகளை பெற்ற திமுக கூட்டணி இந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் பெற்றுள்ளது.

இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்பதை காட்டுவதாகவும் விக்கிரவாண்டி தொகுதி மக்கள் சாதி, மத ரீதியானவர்களுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

அதிமுக

அதிமுக கட்சிக்குள் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. பல்வேறு பிரிவினைகள் உள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு அதிமுகவில் பல்வேறு தோல்விகள் சந்தித்து வருவதால் கருத்து மோதல்கள் இருந்து வருவதாகவும்,

அதை மீண்டும் வலியுறுத்தும் வகையில் இடைத்தேர்தலில் அவர் பின்வாங்கி இருப்பதாக கருத்துகள் வந்து கொண்டிருப்பதாகவும், பாஜகவின் முதலாளியின் சொல்லிற்கு கட்டுபட்டு அதிமுக பின் வாங்கி இருப்பதாகவும், அதிமுக எந்த நிலையில் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பாக உள்ளதாக கூறினார்.

திமுக

அரசு போக்குவரத்து கழகத்தில் காலி பணியிடங்கள் நிரப்பும் வரை அரசு பேருந்துகள் இயக்கம் நிறுத்த முடியாது என்றும் கிராம புறங்களில் அரசு பேருந்துகளை நம்பி பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் உள்ளதால் அதற்காக தான் தற்காலிக பணியாளர்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும்,

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் நிரந்த பணியாளர்கள் எடுத்த உடன் தற்காலிக பணியாளர்கள் நீக்கபட்டது போல ஏழு அரசு போக்குவரத்து கழகங்களிலும் தற்காலிக பணியாளர்கள் நிரந்தபணியாளர்கள் எடுத்தவுடன் நீக்கப்படுவார்கள் விளக்கமளித்துள்ளார்.

பாஜக என்ற முதலாளியின் சொல்லிற்கு அதிமுக கட்டுப்படுகிறது – போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்

அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக பணியாளர்கள் எடுப்பதால் வேலை வாய்ப்பு பாதிக்கபடுமென கூறும் கருத்து தேவையற்றது அது எதிர்கட்சிகள் வைக்கின்ற வீண் குற்றச்சாட்டு என கூறியுள்ளார்.

Share This Article
Leave a review