மீண்டும் இலவச மடிக்கணினி திட்டம்-அமைச்சர் உறுதி.!

0
81
பள்ளி மாணவர்கள்

2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியை வீழ்த்தி தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரியணை ஏறியது. அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய திட்டங்களை வெளியிட்டு இருந்தது. அதில், முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம். ஏழை மாணவர்கள் தங்களது கனவை எட்ட உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலவச மடிக்கணினி திட்டம்:

அதன்படி, 2012ஆம் ஆண்டு அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. இதன் மூலம் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை பயில ஏழை மாணவர்களுக்கு உதவியாக அமைந்தது. தொடர்ந்து, 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக, இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியது. அதிமுகவின் இலவச சைக்கிள் திட்டம் பள்ளி மாணவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல், இலவச மடிக்கணினி திட்டமும் சிறப்பான ஆதரவை பெற்றது. அதிமுக ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகள் மாணவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறியது.

அன்பில் மகேஷ்

மடிக்கணினி திட்டம் நிறுத்தம்:

இந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால், பள்ளி மாணவர்களிடையே மீண்டும் இலவச மடிக்கணினி திட்டத்தை கொண்டு வர கோரிக்கைகள் எழுந்தன. கொரோனா மற்றும் நிதிநிலை காரணமாக இந்த திட்டம் நிறுத்தப்பட்டதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கியமான தகவலை கூறியுள்ளார்.
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது, நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாட்டின் நிதிநிலைமை சீரான பிறகு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்றும் அதற்கான தேதியை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் கூறினார்.

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி:

மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்களை அழைத்து சென்றது போல, ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை இலவசமாக பார்க்க அரசு பள்ளி மாணவர்களை அழைத்து செல்வது குறித்து துறை அமைச்சருடன் பேசி ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
அவரது அடுத்தடுத்த அறிவிப்புகள் பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியாகவே அமையும் என நிச்சயமான கூறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here