7 ஆண்டுகளுக்கு பின் கோடநாடு எஸ்டேட்டுக்கு வந்த சசிகலா கண்ணீர் மல்க பேட்டி..!

2 Min Read

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேடிற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் முதல் முறையாக சசிகலா 7 வருடங்களுக்கு பிறகு வருகை புரிந்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதாவும், சசிகலாவும் கோடநாடு பங்களாவில் தங்கி சென்றனர். பின்னர் டிசம்பர் மாதம் ஜெயலலிதா உயிரிழந்தார். அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு கோடநாடு பங்களாவில் கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் நிகழ்ந்தது முதல் சசிகலா அங்கு செல்லாமல் இருந்து வந்தார்.

கோடநாடு எஸ்டேட்

இந்த நிலையில் அந்த எஸ்டேட்டில் ஜெயலலிதாவின் சிலை அமைக்கப்பட உள்ளது. அதன் பூமி பூஜை நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சசிகலா விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை வந்தடைந்த அவர், கோவையில் இருந்து சாலை மார்க்கமாக கோடநாடு புறப்பட்டு அவருடன் இளவரசியும் உடன் சென்றார்.

7 ஆண்டுகளுக்கு பின் கோடநாடு எஸ்டேட்டுக்கு வந்த சசிகலா

கோடநாடு சென்ற சசிகலாவிற்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா கண்ணீர் மல்க பேசினார். அப்போது பேசிய அவர்;- அம்மா (ஜெயலலிதா) உடன் வந்துள்ளேன். அவர் இல்லாமல் அம்மா நினைவாக எங்கள் தோட்டத்தில் உள்ளவர்களை பார்க்க வேண்டுமென வந்துள்ளேன். இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்படும் என நினைக்கவில்லை.

அப்போது எங்களுடைய தோட்டத்தில் நீண்ட காலமாக சிறு வயதில் இருந்து காவலாளியாக இருந்த நல்ல மனிதர் இந்த இடத்தில் உயிர் விட்டார். நிச்சயமாக உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அம்மா தெய்வமாக இருந்து தண்டனை வாங்கி தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. அம்மாவிற்காக பூஜை செய்ய வந்துள்ளேன். விரைவில் செய்வோம். அதிமுக ஒன்றுபட நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

சசிகலா கண்ணீர் மல்க பேட்டி

இதனால் நிச்சயமாக அந்த பணியும் நல்லபடியாக முடியும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போக வேண்டும். அது தான் அரசியலில் நல்லது என நினைக்கிறேன். அந்த மாதிரியான சூழ்நிலை காலகட்டம் வரும் போது நிச்சயம் அது நடக்கும்” எனத் தெரிவித்தார்.

Share This Article
Leave a review