விருதுநகர் பட்டாசு தொழிற்சாலையில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்க கோரி வழக்கு
உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு
உரிய இழப்பீட்டை வழங்கி, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
விருதுநகரை சேர்ந்த விஜய் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், ” கடந்த 2021ல் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ மாரியம்மன் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து நிகழ்ந்தது. இதில் 27 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாயும் 50% மேல் 15 லட்ச ரூபாயையும், 25% மேல் 10 லட்ச ரூபாயையும், 5%மேல் 5 லட்ச ரூபாயையும் இழப்பீடாக வழங்க உத்தரவு பிறப்பித்தது. அதோடு சிறுகாயம் அடைந்தவர்களுக்கு 2 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் ஸ்ரீ மாரியம்மன் பட்டாசு தொழிற்சாலையில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவரின் குடும்பத்திற்கு வழங்கப்படவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே ஸ்ரீ மாரியம்மன் பட்டாசு தொழிற்சாலையில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/im-not-an-ordinary-leader-like-others-says-actor-sarathkumar-who-joined-the-bjp/
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, ” உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை வழங்கி, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் தமிழக தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும் என குறிப்பிட்டு, வழக்கை செப்டம்பர் 30 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.