மற்றவர்களைப்போல் நான் சாதாரண தலைவன் இல்லை – சமக கட்சியை களைத்து பாஜக வில் இணைந்த நடிகர் சரத்குமார் ஆவேசம் .!

2 Min Read
நடிகர் சரத்குமார்

மற்றவர்களைப்போல் நான் சாதாரண தலைவன் இல்லை என்றும் , எல்லா இடங்களிலும் பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மிக மிக அவசியம் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

கேரள நடிகர்கள் தவறு செய்துள்ளார்களா? இல்லையா? என்பதை நிரூபிக்கப்பட வேண்டியது அவர்களது கடமை என மதுரையில் நடிகர் சரத்குமார் பேட்டி அளித்துள்ளார் .

பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம. ஸ்ரீனிவாசனின் 61 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச சீருடை, மத்திய அரசின் 5 லட்சம் மதிப்புள்ள காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நடிகர் சரத்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் சரத்குமார், “சினிமா துறையில் உள்ள பிரச்சினைகளை அறியப்பட்ட இந்தியாவில் முதன் முறையாக ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது, ஹேமா கமிட்டி அறிக்கையில் சினிமா துறை சுகாதார சீர்கேடாக உள்ளதாகவும், பாலியல் துன்புறுத்தல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரையும் அவதூறு பரப்பும் நோக்கில் குறிப்பிட்ட பெயரை சொல்லி ஹேமா கமிட்டி சொல்லவில்லை, கேரள நடிகர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டதாக வழக்குகள் பதியப்பட்டு வருகிறது, கேரள நடிகர்கள் தவறு செய்துள்ளார்களா? இல்லையா? என்பதை நிரூபிக்கப்பட வேண்டியது அவர்களது கடமை, சினிமாத்துறை மட்டுமல்ல காவல்துறை உள்ளிட்ட எல்லா துறைகளிலும் பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது, நிர்பயா கொலை வழக்கு, கொல்கத்தா மருத்துவர் கொலை போன்ற சம்பவங்கள் எல்லா இடங்களிலும் நடக்கிறது.

ஏதோ ஒரு சூழ்நிலையில் இது போன்று நடக்கின்றது. எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே” என்ற எம்.ஜி. ஆர் பாடல் தான் நினைவுக்கு வருகிறது. பிறர் என்ன செய்தார்கள் என்று யோசிப்பதை விட நாம் நம் மக்களை எவ்வாறு சீர்படுத்தி கொள்ள வேண்டும். எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி தான் நான் நினைப்பேன்.

என் மனைவி ராதிகா , ஏன் அன்று சொல்லவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். என் மனைவிக்கு கடந்து போக கூடிய சக்தி இருந்ததால் அவர் அன்று சொல்லாமல் இருந்திருக்கலாம். நாம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை இருக்கிறது என்று தெரிந்தால் தான் இதை திருத்த முடியும்.

கொஞ்சம் இதையும் படிங்க: https://thenewscollect.com/did-former-chief-minister-edappadi-illegally-allow-family-members-to-draw-water-from-cauvery/

மற்றவர்களை போல் சாதாரண தலைவன் கிடையாது. என்னிடம் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். ஹேமா கமிட்டி போல எல்லா இடத்திலும் கமிட்டி அமைக்க வேண்டும், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதே குற்றச்சாட்டு உள்ளது, நாம் பெண்களை மதிக்க கற்றுக் கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தால் தவறுகள் நடைபெறாது” என்றார்.

Share This Article
Leave a review