38 வயதில் பிரபல தயாரிப்பாளருக்கு 2-வது மனைவியாகும் நடிகை அஞ்சலி – யார் அந்த மாப்பிள்ளை..?

2 Min Read

அஞ்சலி ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ரசோலில் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர்.அவர் தனது பள்ளிப்படிப்பை ரசோலில் முடித்தார். பின்னர் தமிழ்நாட்டில் உள்ள சென்னைக்குச் சென்றார்.

- Advertisement -
Ad imageAd image

தனது கல்வியை முடித்த பின்னர், அவர் குறும்படங்களில் நடிக்க தொடங்கினார். இது திரைப்பட துறையில் நுழைவதற்கு வழி வகுத்தது. அஞ்சலி தனது பெற்றோருக்கு ஒரு நடிகராவதற்கான அபிலாஷைகள் இருப்பதாகவும், அவர்கள் மூலம் அவர்களின் கனவுகளை அவர்கள் உணர்ந்தார்கள் என்றும் குறிப்பிட்டார்.

38 வயதில் பிரபல தயாரிப்பாளருக்கு 2-வது மனைவியாகும் நடிகை அஞ்சலி

ஜீவா நடிப்பில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி. இவர் தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

அஞ்சலி கெரியரில் முக்கியமான படங்களில் ஒன்று அங்காடி தெரு என்ற படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியாக இருந்து வந்தார். சினிமாவில் நடிக்கும் நடிகைகள் சக நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்குவது வழக்கமான ஒன்று.


38 வயதில் பிரபல தயாரிப்பாளருக்கு 2-வது மனைவியாகும் நடிகை அஞ்சலி

ஆனால் அப்படி நடிகை அஞ்சலியும் சிலருடன் காதலில் கிசுகிசுவில் சிக்கி வந்துள்ளார். மேலும் பின் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு பக்கம் சென்று நடித்து வருகிறார்.

தற்போது ஆந்திராவை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஒருவரை அஞ்சலி திருமணம் செய்ய உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த தயாரிப்பாளர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்ற தகவல் வெளியாகி தெலுங்கு சினிமா பக்கம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நடிகை அஞ்சலி

அதிலும் அந்த தயாரிப்பாளர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்றும் இரண்டாம் தாரமாக தான் அஞ்சலி அவரை திருமணம் செய்ய உள்ளார் என்ற தகவும் வெளியாகி இருக்கிறது.

Share This Article
Leave a review