தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய் – விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட்டம்..!

3 Min Read

கள்ளக்குறிச்சி மாவட்டம், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் இன்று தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக பதிவு செய்ததை அடுத்து கள்ளக்குறிச்சியில் அந்த கட்சியினர் மாவட்ட இளைஞரணி தலைவர் பிரகாஷ் மற்றும் நகர தலைவர் ராஜேஷ் ஆகிய தலைமையில் அந்த கட்சியினர் பட்டாசு வெடித்தும்,பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் சேலை வேட்டி வழங்கியும் கொண்டாடினர். அதை தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் வாழ்க ,வருங்கால முதல்வர் தளபதி வாழ்க என முழக்கங்களை எழுப்பினர்.

- Advertisement -
Ad imageAd image
விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட்டம்

கரூர் மாவட்டம், தமிழ்நாட்டில் முன்னணி நடிகர் நடிகரான விஜய் கடந்த 2009-ம் ஆண்டு நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என்று ஆரம்பித்து, பொதுமக்களுக்கு மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த ஓராண்டாக நடிகர் விஜய் கட்சி ஆரம்பிப்பதாக கூறிவந்த நிலையில், இன்று விஜய் மக்கள் இயக்கத்தை தற்போது “தமிழக வெற்றி கழகம்” என்று நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.

விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட்டம்

இதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் ஒன்று சேர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விஜய் நற்பணி மன்ற கொடியுடன் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட்டம்

அதனை தொடர்ந்து பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளர்கள், பூக்கடை மற்றும் தரைக்கடை வியாபாரிகளுக்கு சீருடை மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்‌. நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் பெயரை இன்று அறிவித்ததை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் தாரை தப்பட்டை ட்ரம்ஸ் வாத்தியங்கள் முழங்க விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழக வெற்றி கழகம் வாழ்க, டாக்டர் விஜய் வாழ்க, வருங்கால தமிழக முதல்வர் வாழ்க என்று முழக்கமிட்டவாறு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட்டம்

பின்னர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இனிப்புகளுடன் காக்கி சீருடைகளையும் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து செருப்பு தைக்கும் தொழிலாளிகள் பூ வியாபாரிகளுக்கு வேட்டிகளை வழங்கினர். விஜய் ரசிகர்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதை தொடர்ந்து வண்டிக்கார தெரு பிரசன்ன மாரியம்மன் ஆலயத்திற்கு வந்த விஜய் ரசிகர்கள் விஜய் படத்திற்கு சூடம் காண்பித்தனர்.

விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட்டம்

மேலும் சிதறுதேங்காய் உடைத்து மண்டியிட்டு ஆலயம் உள்ளே வந்து தங்களின் கட்சி வளர்ச்சி அடையவும், நடிகர் விஜய் வருங்கால தமிழக முதல்வராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். பின்னர் தந்தை பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களுக்கு பேரணியாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Share This Article
Leave a review