முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்யும் விழுப்புரம் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற தலைவர் மணிகண்டன் என்பவர் அரசு பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அப்போது நடிகர் சூர்யா மணிகண்டன் இல்லத்தில் நேரில் குடும்பத்தினரை சந்தித்து அவரது உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அகில இந்திய சூர்யா ரசிகர் மன்றத்தில் விழுப்புரம் மாவட்ட தலைவர் மணிகண்டன் என்பவர் பல வருடங்களாக நடிகரின் ரசிகராக இருந்து வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் அடுத்த முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்து வருபவர் மணிகண்டன். மேலும் இன்று இவர் பிற்பகல் மணி அளவில் பணியை முடித்து விட்டு அவர் வீடு திரும்பினார்.
அப்போது விழுப்புரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் சென்னை – திருச்சி இடையே தேசிய நெடுஞ்சாலை அருகே திடிரேன்று இவர் மீது அரசு பேருந்து மோதி தலைநசிங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

அப்போது உயிரிழந்த மணிகண்டன் நடிகர் சூர்யாவின் ரசிகர் மன்றத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர் ஆவார். இந்த நிலையில் இன்று நடிகர் சூர்யா மணிகண்டன் இல்லத்தில் நேரில் சென்று உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் மட்டுமல்லாமல் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் சூர்யா தனது ரசிகர்களுடன் நல்ல உறவைப் பகிர்ந்து கொள்ளும் நடிகர்களில் ஒருவர். அப்போது சூர்யா ரசிகர் மன்றத்தின் கௌரவ தலைவர் ராஜசேகர பாண்டியன் அகில இந்திய தலைவர் பரமு செயல் தலைவர் ஆர்.ஏ ராஜ் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் அவருடன் இருந்தனர்.