ரசிகரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்தியச் சிறைச்சாலையில் இருக்கும் கன்னட நடிகர் தர்ஷன், நாற்காலியில் அமர்ந்தபடி ஒரு கையில் காபி மக் மற்றும் சிகரெட் உடன் தனது நண்பர்களுடன் அரட்டையடித்து பேசி கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் நடிகர் தர்ஷன் சிறையிலிருந்தபடியே வீடியோ கால் பேசும் புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது
மத்தியச் சிறையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றாவளிக்கு வி.ஐ.பி., உபசாரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மேலும் நடிகர் தர்ஷனுக்கு விதிகளை மீறி சட்டவிரோதமாக சலுகை அளித்ததாக ஜெயிலர் உட்பட 7 சிறை அதிகாரிகளை அம்மாநில சிறைத்துறை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது .

தர்ஷன் மீதான வழக்கு :
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த அப்பல்லோ பார்மசி ஊழியர் ரேணுகா சுவாமி. 33 வயதான இவர், கடந்த ஜூலை 11 ஆம் தேதி காமக்ஷிபால்யா என்னும் இடத்தில் உள்ள சாக்கடையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய கன்னட நடிகர் தர்ஷன், அவரது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 நபர்களை இதுவரை கைது செய்யதுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட ரேணுகாசுவாமி நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர் என சொல்லப்படுகிறது.
தர்ஷனுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், நடிகை பவித்ரா கவுடாவுடன் பழகி வந்துள்ளார் . இதற்கு தர்ஷனின் மனைவி கண்டனம் தெரிவிக்கவே , பவித்ரா கவுடா தர்ஷனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
தனக்கு பிடித்த நடிகரின் வாழ்க்கையில் பவித்ரா இடையூறு செய்வதை விரும்பாத ரேணுகா சுவாமி, பவித்ராவை திட்டி பதிவிட்டு வந்துள்ளார். இது பவித்ராவுக்கு ஆத்திரத்தை மூட்டியுள்ளது. அதன் பிறகே ரேணுகா சுவாமி சித்ரதுர்காவில் கடத்தப்பட்டு பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் சாக்கடையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் சிறை வளாகத்தில் நாற்காலியில் அமர்ந்தபடி கையில் காபி மற்றும் சிகரெட் உடன் மூன்று நண்பர்களுடன் அரட்டையடித்து பேசும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் தர்ஷன் உடன் ரவுடி வில்சன் மற்றும் அவரது மேலாளராக பணிபுரிந்த நாகராஜ் ஆகியோர் அமர்ந்து கொண்டு அரட்டை அடிக்கும் அந்த புகைப்படம், சிறை விதிகள் மீறப்பட்டிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது .
மேலும் தர்ஷனுக்கு இந்த உபச்சாரம் சிறை அதிகாரிகளின் உதவியின்றி எப்படி நடக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது .
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/its-been-six-months-still-no-post-has-been-given-vijayadharani-speech-in-bjp-public-meeting-caused-a-stir-at-chennai/
மேலும் இந்த புகைப்படம் வெளியாகி மாநில போலீசார் மீதான நம்பிக்கை கேள்விக்குறி ஆகியுள்ளதால் ரேணுகாசாமியின் கொலை வழக்கை சி.பி.ஐ. க்கு மற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது .
கன்னட நடிகர் தர்ஷனுக்கு சிறை சட்டத்தை மீறி சலுகைகள் அளித்த 7 சிறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து கர்நாடகா அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.