துபாய் , ஜப்பானை தொடர்ந்து , முதல்வர் நாளை அமெரிக்கா பயண …

The News Collect
2 Min Read
முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் உள்ள மாநிலமாக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சிறப்பான செயல்பாடுகள் இதன் மூலம் நமது இலக்கை விரைவாகவும் எளிதாகவும் எட்டமுடியும் என்ற தெரிவித்த முதல்வர் .

- Advertisement -
Ad imageAd image

இதன் ஒரு பகுதியாக முதிலீட்டளர்களை ஊக்கிவிக்கும் நோக்கில் துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொண்டார். முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறும் அழைப்பு விடுத்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடும், முதலீட்டாளர்கள் சந்திப்புகளும் நடத்தப்பட்டு, ரூ.9 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, உயர்தர வேலைவாய்ப்பு, உயர்தர முதலீடு ஆகியவற்றை நோக்கமாக கொண்டு, முதல்வர் அமெரிக்கா செல்வதாகவும் அறிவிக்கப்பட்டது.

முதல்வரின் அமெரிக்கா பயணத்தை முன்னிட்டு இன்று சென்னையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அரசு துறை செயலாளர்களுடன் ஆலசோனை நடத்துகிறார் முதல்வர் மு க ஸ்டாலின் .

உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மேலும் இந்த ஆலசோனை கூட்டத்தை முடித்த பிறகு முதல்வர் ஸ்டாலின் நாளை (ஆகஸ்ட் ஆக.27) இரவு சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். அங்கு 17 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

செப்டம்பர் 2-ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து புறப்பட்டு சிகாகோ செல்கிறார். அங்கு 12-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு முதலீட்டாளர்களை சந்திக்கிறார். ‘ஃபார்ச்சூன் 500’ பட்டியலில் உள்ள உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் பேசுகிறார். இதற்கிடையே, செப்.7-ம் தேதி அயலக தமிழர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 12-ம் தேதி சென்னை திரும்புகிறார்.

இதையும் கொஞ்சம் படிங்க: 

இந்நிலையில், முதல்வரின் பயண முன்னேற்பாடுகளுக்காக, தொழில் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா, அமெரிக்கா சென்றுள்ளார். முதல்வர் பங்கேற்க உள்ள ‘சிகாகோ – அமெரிக்க தமிழர்கள் உடனான சந்திப்பு’ நிகழ்ச்சி தொடர்பாக சிகாகோவில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகளுடன் அவர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். அமெரிக்கா வரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

Share This Article
Leave a review