மெடிக்கல் கடையில் கருக்கலைப்பு – புரோக்கர் உள்பட 4 பேர் கைது..!

2 Min Read

வேப்பூர் அருகே மெடிக்கல் கடை நடத்தி கருக்கலைப்பு செய்த 2 புரோக்கர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

- Advertisement -
Ad imageAd image

மேற்பார்வை செய்யப்படாத மருத்துவக் கருக்கலைப்பு, தாய்வழி நோயுற்ற தன்மை மற்றும் இறப்புக்கு வழிவகுக்கும். இந்த தீங்கான நடைமுறையைக் குறைக்க, கடுமையான சட்டங்கள் கண்காணிக்கப்பட வேண்டும். மேலும் கருக்கலைப்பு மாத்திரைகள் கவுண்டரில் விற்பனை செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் கருக்கலைப்பு மாத்திரைகளை பொதுமக்களுக்கு அணுகுவது MTP-க்கு அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் மூலமாக மட்டுமே இருக்க வேண்டும்.

மெடிக்கல் கடையில் கருக்கலைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் மணிவண்ணன் வயது (34). இவர், தனது மனைவி சினேகாவை உரிமையாளராக கொண்டு கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த உள்ள கழுதூர் கிராமத்தில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். இந்த மெடிக்கல் கடைக்கான உரிமம் அசகளத்தூரை சேர்ந்த மருந்தாளுநர் கவுதமி வயது (29) என்பவரது பெயரில் பெறப்பட்டுள்ளது.

மெடிக்கல் கடையில் கருக்கலைப்பு புரோக்கர் உள்பட 4 பேர் கைது

இந்த நிலையில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் மெடிக்கல் கடையில் சட்ட விரோதமாக கருகலைப்பு செய்வதாக வேப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் குராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீசார் மெடிக்கல் கடை முழுவதையும் சோதனை செய்ததில் மணிவண்ணன், மருந்தாளுநர் கவுதமி ஆகிய இருவரும் இணைந்து தொடர் கருக்கலைப்பு செய்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

வேப்பூர் காவல் நிலையம்

இதை அடுத்து போலீசாரின் தலைமையில் விருத்தாசலம் அரசு 7 மருத்துவமனை தலைமை மருத்துவர் சுவாமி வேப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்கள் அகிலன், கண்ணன் ஆகியோர் மீது விசாரணை மேற்கொண்டதில் கருக்கலைப்பு செய்ததற்கு ஆதாரங்கள் உறுதிபடுத்தப்பட்டது. மேலும் மெடிக்கல் கடையில் வைத்திருந்த கருக்கலைப்பு மாத்திரைகள், அதற்கு பயன்படுத்திய உபகரணங்கள், கருவில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என கண்டறியும் ஸ்கேன் கருவிகள் உள்ளிட்டவை போலீசாரால் கைப்பற்றப்பட்டது.

இது குறித்து தலைமை மருத்துவர்கள் அகிலன், கண்ணன் ஆகியோர் மீது கொடுத்த புகாரின் பேரில் மணிவண்ணன், கௌதமி, புரோக்கர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்த கண்ணதாசன் வயது (29), தினேஷ் வயது (22) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review