ஆதவ் அர்ஜுன் ரெட்டிகார், இவர் சபரீசனின் நண்பர். திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியை கட்டமைத்தவர் கடந்த ஆண்டு வருமான வரி மட்டுமே 4000 கோடி கட்டிய லாட்டரி மார்ட்டின் குடும்பத்தை சேர்ந்தவர்.
பொருளாதாரத்தின் உச்சத்தை தொட்டு விட்டோம். ஆனால் இதையெல்லாம் தக்க வைக்க எங்களுக்கு அரசியல் அதிகாரம் தேவை. எனவே எங்கள் குடும்பத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வாங்க விரும்புகிறோம். கள்ளக்குறிச்சி தொகுதியை தந்தால் நன்றாக இருக்கும் என்று சபரிசனை அணுகுகிறார்.

கள்ளக்குறிச்சி தொகுதியை தந்தால் பொன்முடி தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பும். மேலும் பணக்காரன் என்பதால் கட்சியில் சேர்ந்தவுடன் சீட்டு கொடுக்கிறார்கள் என்று திமுக மீது கடும் விமர்சனம் எழும்பும். எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேருங்கள், அவர்களுக்கு அந்த சீட்டை கொடுத்து விடுகிறோம்.

அங்கிருந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டி போடுங்கள். உங்கள் ஆசை நிறைவேறி விடும் என்று அறிவுரை கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி மாநாட்டு மொத்த செலவையும் ஏற்கிறார்.
இந்த ஆதவ் அர்ஜூன் சுமார் 50 கோடி செலவு செய்து மிக பிரமாண்டமாக மாநாட்டை நடத்தி காட்டுகிறார். அடுத்த வாரம் கட்சியில் இணைகிறார். அடுத்த வாரம் கட்சியில் மாநில துணை பொது செயலாளர் பதவி கொடுக்கப்படுகிறது.

திமுக-வால் அப்பாய்மெண்ட் ஆனவர். கொடை அளிப்பதில் அடுத்த செந்தில் பாலாஜி இப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒரு பொது தொகுதி கேட்கப்படுகிறது. அதுவும் கள்ளக்குறிச்சி தொகுதி தான் வேண்டும் என்று கேட்கபடுகிறது.
இதில் நாங்கள் எங்கள் கட்சி சின்னத்தில் போட்டி போடா விட்டாலும் பரவாயில்லை. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்று உறுதிமொழி கொடுக்கப்படுகிறது. இந்த மாநாட்டுக்கு 50 கோடி செலவு செய்கிறார்.

அப்படி என்றால் வேட்பாளராக அறிவித்தால் எப்படியும் 300 கோடி செலவு செய்வார் என்று வீதிக்கு விதி தங்கள் சக சமூகத்தோடு அரசியல் காரணங்களுக்காக சண்டை போட்டுக் கொண்டு அலையும் விடுதலை சிறுத்தைகள் இளைஞர்கள் பீத்திக்கொள்கிறார்கள்.
இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்து இறங்கும் இந்த பணக்கார வீட்டு பிள்ளைக்காக ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் வயப்படுத்துவதற்காக அல்லது சமூகத்தின் விளிம்பில் நின்று கொண்டு தீண்டாமையை அதன் கடைசி சொட்டு வரை அனுபவிக்கும்.

ஒரு அட்டவணை பிரிவு சமூக மக்களுக்காக போராடுகிறேன் என்று சொல்லும். இந்த திருமாவளவன் இன்று இந்த கட்சி பதவிக்கு வரும்போது அந்த பதவியை rolls-royce காரில் வந்து இறங்கும் ஒரு உயர் வகுப்பு இளைஞனுக்கு தாரை வார்க்கிறார்.