திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தில் மலேசியாவை சேர்ந்த பெண் பெட்ரோல் கேனுடன் அமர்ந்து போராட்டம். பொது அதிகாரம் வழங்க பதிவு செய்ய வந்த மலேசியா பெண் இவரிடம் லஞ்சம் கேட்டதாகவும் பதிவு செய்வதில் 8- மணி நேரம் காலதாமதம் படுத்தியதாகவும் சார்பதிவாளர் அலுவலகத்தின் மீது குற்றச்சாட்டை முன்வைத்து பெட்ரோல் கேனுடன் மலேசிய பெண் போராட்டம் மேற்கொண்டதால் இரவு 9:30 மணி வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், அடுத்த திருத்தணி நகராட்சியில் பழைய சென்னை சாலையில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் மலேசியா நாட்டைச் சேர்ந்த டத்து ராமேஸ்வரி என்ற பெண் தனது பெயரில் உள்ள இரண்டு ஏக்கர் இடம் திருத்தணி அருகில் உள்ள பொன்பாடி என்ற தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இடத்தை திருவள்ளூர் சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணிற்கு பொது அதிகாரம் வழங்குவதற்காக சார் பதிவாளர் அலுவலகத்தில் வந்துள்ளனர்.

இவர்களுக்கு சார்பதிவாளர் திருத்தணி அலுவலகத்தில் ஜனவரி- 30 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12- மணிக்கு பதிவு செய்யப்படும் என்று டோக்கன் வழங்கி விட்டு சப்ரெஜிஸ்டர் சுகன்யா வேறொரு பணிக்காக சென்று விட்டதால் மலேசியா பெண் டத்தோ ராமேஸ்வரி இவருக்கு பத்திரப்பதிவு செய்ய குறித்த நேரத்தில் செய்யாமல் சிறிது நேரத்தில் செய்து கொடுக்கிறோம் என்று பல மணி நேரம் கடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரவு 7 மணி வரை காலதாமதம் ஆனதால் உங்கள் இடத்திற்கு மற்றொருவர் உங்கள் இடத்தை பொது அதிகாரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
மலேசியா சேர்ந்த பெண்ணிடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் கூறியதாகவும் மேலும் லஞ்சம் கேட்பதாகவும் என்ற ஏனைய குற்றச்சாட்டுகளை சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் மீது முன்வைத்து மலேசியாவை சேர்ந்த பெண் டத்தோ ராமேஸ்வரி கையில் பெட்ரோல் கேனுடன் தற்கொலை செய்து கொள்வதாக கூறி திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு இரண்டு மணி நேரம் இரவில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
மலேசியாவில் இருந்து வந்த எனக்கு பொது அதிகாரம் பதிவு செய்ய வந்த என்னிடம் லஞ்சம் கேட்பது நியாயமா? எனக்கு குறித்த நேரத்தில் பதிவு செய்யாமல் என்னை தற்கொலைக்கு தூண்டுவதாகவும் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து மலேசிய பெண் போராட்டத்தில் ஈடுபட்டார் செய்தியாளர்கள் சந்திப்பிலும் தெரிவித்தார்.
மேலும் நண்பகல் 12 மணிக்கு பதிவு செய்வதாக டோக்கன் வழங்கி விட்டு இரவு 9:30 வரை சுமார் 8 மணி நேரம் என்னை காக்க வைத்து விட்டு நாளை பதிவு செய்ததெல்லாம், சர்வர் பிராப்ளம் போன்ற காரணங்களை கூறி என்னை ஏமாற்ற பார்க்கிறார்கள். அப்போது லஞ்சப் பணம் கேட்டு விட்டு தற்போது சர்வர் சரியில்லை என்று குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். இன்று மட்டும் சுமார் 70 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எங்கள் பத்திரம் ஏன்? பதிவு செய்யவில்லை என்று மலேசியா பெண்ணுடன் வந்த வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தை சேர்ந்த சசிகுமார் என்பவர் கேள்வி? எழுப்பி சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர்கள் சந்தித்து போராட்டம் செய்த மலேசியா பெண் டத்தோ ராமேஸ்வரி பெட்ரோல் கேனுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் மலேசிய சார்ந்த பெண் ஈடுபட்டதால் 8 மணி நேரம் அந்த அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இரவு 10 மணிக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரிகள் 10 மணிக்கு மேலாக மலேசியாவில் சேர்ந்த அந்த பெண்ணின் பத்திரம் பொது அதிகாரம் பதிவு செய்து வழங்கினார்கள். பின்னர் மலேசியாவை சேர்ந்த பெண்ணின் போராட்டம் பெட்ரோல் கேனுடன் ஈடுபட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.