அய்யம்பேட்டை அருகே குடமுருட்டி ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி மாயம்.!

1 Min Read
  • அய்யம்பேட்டை அருகே குடமுருட்டி ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி மாயம் தேடும் பணியில் பாபநாசம் தீயணைப்பு துறையினர்.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல்(29) டிரைவராக பணிபுரிந்து வருகிறார் இவர் தனது வீட்டிற்கு எதிரில் உள்ள குடமுருட்டி ஆற்றில் குளிக்க சென்ற போது ஆற்று நீரின் அளவு அதிகமாக இருப்பதால் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் பாபநாசம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் அய்யம்பேட்டை போலீசார் பொதுமக்கள் உதவியுடன் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர் சக்திவேலை தேடி வருகின்றனர்.
மேலும் அய்யம்பேட்டை காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review