- திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்து எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி. மற்றொரு இளைஞர் படுகாயம்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக பழவேற்காடு கடற்கரைக்கு வந்து இரு சக்கர வாகனத்தில் திரும்பிய இளைஞர்கள் எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில் விக்கி என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.தீபக் என்ற இளைஞர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நண்பனின் பிறந்த நாளுக்காக கும்முடிபூண்டியில் தனியார் கம்பெனியில் வேலை செய்யும் 14 நண்பர்களுடன் பழவேற்காடு சென்று திரும்பி வரும்பொழுது போலாச்சி அம்மன்குளம் பேருந்து நிறுத்தம் அருகில் நின்றிருந்த அரசு பேருந்தில் வலது பக்கத்தில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து மோதியதில் ஓட்டி வந்த விக்கி என்பவர் தலை மற்றும் வலது கால் முறிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.மேலும் பின்னால் அமர்ந்திருந்த தீபக் என்பவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து திருப்பாலைவனம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விக்கியின் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலத்த காயமடைந்த தீபக் என்பவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறந்தநாள் நிகழ்ச்சியில் இளைஞர் இறந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.