இது சிக்கன் கிரேவி இல்ல, மவுஸ் கிரேவி ! வெளியான புகைப்படம்

0
110
சிக்கன் கிரேவியில் இறந்து கிடந்த எலி

ஹோட்டலில் சிக்கன் கிரேவியில் எலி இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவுகள் தரமானதாக  இல்லை எனவும் அதில் இறந்த உயிரினங்கள், பிற பொருட்கள் போன்றவை இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிலையில் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள பஞ்சாபி உணவகம் ஒன்றிற்கு  அனுராக் சிங் என்பவரும் அவரது நண்பர் அமீன் என்பவரும் உணவருந்த சென்றுள்ளனர்.  அப்போது அவர்கள் சிக்கன் கிரேவி ஆர்டர் செய்தனர்.

உணவு வந்த பின் சாப்பிடும் போது அதில் இறந்த எலியொன்று கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து அமீன் மற்றும் அவரது நண்பர்  அனுராக் சிங் ஹோட்டலின் முதலாளியிடம் கேட்ட போது அவர் சரிவர பதிலளிக்கவில்லை. இதனால் இவர்களுக்கு  இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். அவர்கள் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில்  காவல்துறையினர் உணவில் கலப்படம், மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் என்ற பிரிவுகளின் கீழ் உணவக மேலாளர், உணவக சமையல்காரர், உணவை பரிமாறியவர் என மூவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது போன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.  இந்நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்  சோதனைகளில் ஈடுபட்டு தரமற்ற  இறைச்சிகளை கண்டறிந்து அழித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here