நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் முன்னிட்டு பாட்ஷா பட பாணியில் வாயால் ரஜினிகாந்த் படத்தை வரைந்த ஓவியர்..!

2 Min Read

நடிகர் ரஜினிகாந்த் பாட்ஷா பாரு “பாட்ஷா பட பாணியில்” கம்பத்தில் கட்டப்பட்ட, கைகளையும் கட்டப்பட்ட நிலையில் “வாயால்” ரஜினிகாந்த் படத்தை வரைந்த ஓவியர்.

- Advertisement -
Ad imageAd image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு.செல்வம் அவர்கள் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் முன்னிட்டு பாட்ஷா படத்தில் ரஜினி கம்பத்தில் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் சீன் மாதிரி, ஓவியர் செல்வம் தன்னை கம்பத்தில் கைகளையும் சேர்த்து கட்டப்பட்ட நிலையில் “வாயால்” பாட்ஷா பட பாணியில் நடிகர் ரஜினிகாந்த் உருவத்தை வரைந்தார். இந்திய சினிமாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற நடிகர் மற்றும் இந்தியாவில் குறிப்பிடப்படும் பிரபலம் முக்கிய நபர்களில் ஒருவர் ரஜினி ஆவார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் கே. பாலச்சந்தர் அவர்களால் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ரஜினிகாந்த்.

வாயால் ரஜினிகாந்த் படத்தை வரைந்த ஓவியர்

இவருக்கு இந்திய ரசிகர்களை தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல ரசிகர்கள் உள்ளனர். ஸ்டைலான நடிப்பு மற்றும் வசனங்கள் உச்சரிப்பு என ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் கவர்ந்து தமிழ் திரையுலகில் “சூப்பர் ஸ்டார்” என்னும் பட்டத்தை பெற்றுள்ளார். ஒவ்வொரு காலகட்டத்திலும் பல நடிகர்களுடன் போட்டியிட்டு, வென்று தமிழ் சினிமாவில் “சூப்பர் ஸ்டார்” என்னும் பட்டத்தின் மூலம் ஜொலித்து கொண்டிருக்கிறார். ரஜினிகாந்த் பிறந்தநாள் முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஓவியர் செல்வம் அவர்கள் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படத்தில் ரஜினியை கம்பத்தில் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் காட்சியை வைத்து ஓவியர் செல்வம்.

வாயால் ரஜினிகாந்த் படத்தை வரைந்த ஓவியர்

இதனை தொடர்ந்து, தன்னை கம்பத்தில் கட்டப்பட்ட நிலையில், கைகளும் சேர்த்து கட்டப்பட்ட நிலையில், வாயில் மார்க்கரை பிடித்துக் கொண்டு “வாயால்” பாட்ஷா பட பாணியில் ரஜினிகாந்த் படத்தை ஆறு நிமிடங்களில் ஓவியர் செல்வம் வரைந்தார். இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள், ரஜினி ரசிகர்கள் ஓவியர் செல்வம் அவர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்கள்.

Share This Article
Leave a review