நீலகிரி மாவட்டம், அடுத்த குன்னூரில் இன்று காலை தனியார் பள்ளி வளாகத்தில் தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அப்போது தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

அப்போது தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று காலை குன்னூர் மவுண்ட் ரோட்டில் உள்ள சென் ஜோசப் பள்ளி வளாகத்தில் தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று தர இறங்கியது.

இதனை பொதுமக்களில் சிலர் ஆச்சிரியத்துடனும் மற்றோரு சிலர் சந்தேகத்துடனும் பார்த்தனர். அப்போது தேர்தல் நேரம் என்பதால் தரை வழியில் வரும் வாகனங்களை மட்டும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர்.
இதனால் வான்வெளியில் பணம் வருகிறதா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுகிறது. இந்த நிலையில் ஹெலிகாப்டர் தரை இறங்கிய தனியார் பள்ளிக்கு தேர்தல் பறக்கும் படையினர் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அதில் ஹெலிகாப்டரில் வந்தவர்கள் ஒரு தனியார் நிறுவனத்தின் உறவினர்கள் என்பதும் அவர்கள் சூட்கேசில் அவர்களது உடமைகளான துணிகள் மட்டுமே இருந்ததாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் தேர்தல் சமயத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்கியது பொதுமக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுகின்றது. தனியார் பள்ளி வளாகத்தில் தரை இறங்கிய ஹெலிகாப்டர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.