தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே பாஜக பிரமுகருக்கு சொந்தமான இறால் பண்ணை வழியில் நடந்து சென்ற மீனவர் அடித்துக் கொலை. அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் திரண்ட மக்களால் பெரும் பரபரப்பு. சாலை மறியல் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே சுந்தர நாயகிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்கலங்காட்டை சார்ந்தவர் அய்யாவு. இவரது மகன் பாலசுந்தரம் வயது 52. பின்னர் அதே பகுதியைச் சார்ந்த சுப்பிரமணியன் மகன் காபர் இருவரும் மீன்கொடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த போகி பண்டிகையான 14 ஆம் தேதி மாலை வழக்கம் போல் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றதாக சொல்லப்படுகிறது.
இந்த பகுதியைச் சார்ந்த மங்கலங்காடு பேக்கிலி காடு உள்ளிட்ட 5 கிராம மக்கள் அனைவரும் மீன்பிடிக்க செல்லும் பாதையில் அமைந்திருக்கிறது.

அப்போது பாஜக பிரமுகரான லோகு என்கின்ற லோகேஸ்வரனுக்கு சொந்தமான இறால் பண்ணை இப்பண்ணை வழியாக மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று பலமுறை பிரச்சனை செய்தும் பெண்கள் உள்பட பலரை அடித்து உதைப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவ்வழியாகச் மீன்பிடிக்க சென்றுள்ளனர். பாலசுந்தரம் காபர் இருவரும் சென்று உள்ளதாக சொல்லப்படுகிறது. அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள இறால் குளம் உப்பளம் அருகே வளைவிரித்து விட்டு காபர் உணவு வாங்க சென்ற நிலையில் தொட்டத்தில் அமர்ந்திருந்த பாலசுந்தரத்தை லோகுவின் உறவினரும் பண்ணை மேனேஜருமான மாரிமுத்து மகன் மகாராஜன் மற்றும் பெயர் தெரியாத 3 நபர்கள் சென்று தனிமையில் இருந்த பாலசுந்தரத்தை தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் அருகில் இருந்தவர்கள் பலத்த காயங்களுடன் இருந்த பாலசுந்தரத்தை மீட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பாலசுந்தரம் இறந்துவிட்டார். இந்த நிலையில் அப்பகுதி பெண்கள் உள்பட மக்கள் உறவினர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று ஒன்று திரண்டு அதிராம்பட்டினம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் சாதிய வன்மத்தோடு தொடர்ந்து தாக்கப்படும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையிலும் கொலையாளியும் கொலைக்கு காரணமானவர்களையும் கைது செய்ய வலியுறுத்தியும், கொலைக்கு காரணமான பிரச்சனைக்குரிய இறால் பண்ணையின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன கோசம் எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் பட்டுக்கோட்டை வட்டாட்சியாளர் (பொறுப்பு) பாஸ்கரன் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரித்திவிராஜ் சவுகான் அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது.