ஆம்பூரில் மருத்துவ படிப்பு படிக்காமல் கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்த பெண் போலி மருத்துவர் கைது. அரசு மருத்துவ அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பு.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மூன்றாவது தார்வழி பகுதியில் பெண் போலி மருத்துவர் ஒருவர் மருத்துவ படிப்பு படிக்காமல் கிளினிக் வைத்து பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் யோகேஸ்வரனுக்கு புகார் அளித்தார்.

அப்போது மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போது ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ரகுபதி மனைவி ரஜினிகாந்தி வயது (42) என்பவர் ஹோமியோபதி பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில் பாதியில் படிப்பு நிறுத்தி விட்டார்.
அப்போது அவர் மருத்துவ பட்டப்படிப்பு முடிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. அப்போது இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அவரிடம் இருந்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்த போலீசார் மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி வந்த பெண் போலி மருத்துவர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அரசு மருத்துவ அலுவலர் யோகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.