கோவையில் போக்குவரத்து காவலர் தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்கு பதிவு..!

2 Min Read

கோவையில் போக்குவரத்து காவலர் தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு. கடும் போக்குவரத்து பாதிப்பு.

- Advertisement -
Ad imageAd image

கோவை மாவட்டம், பாலசுந்தரம் சாலையில் போக்குவரத்து காவலர்கள் நேற்று (பிப். 21) மாலை வாகன பரிசோதனையில் ஈடுபட்டு இருந்து உள்ளனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை வழிமறித்த காவலர்கள், ஆட்டோவின் ஆர்சி புக் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை பரிசோதித்து உள்ளனர்.

போக்குவரத்து காவலர் தாக்கிய ஆட்டோ ஓட்டுனர்

அப்போது ஆட்டோவை ஓட்டி வந்த நபர் மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது மது போதையில் வாகனத்தை இயக்கியதால், அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று காவலர்கள் கூறினார்கள்.

அப்போது ஆட்டோ ஓட்டுநருக்கும், போக்குவரத்து காவலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதில், ஆட்டோ ஓட்டுநர் காவலர்களை தரைக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

போக்குவரத்து காவலர் தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்கு பதிவு

இதனால், ஆத்திரமடைந்த போக்குவரத்து காவலர் ஒருவர் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி உள்ளார். பதிலுக்கு ஆட்டோ ஓட்டுநரும் போக்குவரத்து காவலரை தாக்கி உள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த மற்ற போக்குவரத்து காவலர்கள், ஆட்டோ ஓட்டுநரை அடித்து, அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.

இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். தற்போது, இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 21 ஆம் தேதி கேரளா கிளப் சாலையில் போக்குவரத்து காவலர் விஜயகுமார் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

போக்குவரத்து காவலர் தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்கு பதிவு

அப்போது அந்த வழியே ஆட்டோவை வேகமாக இயக்கி வந்த லோகநாதன் என்பவரை நிறுத்தி தணிக்கை செய்தார். அப்போது ஆட்டோ ஓட்டுநருரான லோகநாதன் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது.

மேலும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட விவரங்களை கேட்ட போது காவலர் விஜயகுமாரை லோகநாதன் ஆபாச வார்த்தைகளில் திட்டி தாக்கியுள்ளார். இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்கு பதிவு

அப்போது ஆட்டோ ஓட்டுனர் மீது 3 பிரிவுகளான 294(b), 332, 506(ii) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share This Article
Leave a review