விழுப்புரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அதிமுகவினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மீது போலீசார் வழக்கு பதிவு.
விழுப்புரம் மாவட்டம் கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் நேற்று அதிமுக சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதற்காக அந்த மண்டபத்தின் அருகில் அந்த கட்சியினர் கொடி கம்பங்களை நட்டதோடு விளம்பர பதாகைகளையும் வைத்து அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன் பேரில் அதிமுக வடக்கு நகர செயலாளர் உள்ளிட்ட 200 பேர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதேபோன்று விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் நேற்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் அலுவலகத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வருகை தந்தார்.
இதற்காக நாம் தமிழர் கட்சியினர் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்த வகையில் 25 மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக வந்தனர். இது தொடர்பாக விழுப்புரம் நகர கிராம நிர்வாக அலுவலர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அப்போது புகார் அடிப்படையில் 25 பேர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.