கோவை உக்கடம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. அந்த பகுதியில் நெடுகிலும் நின்று CAA சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கையில் மெழுகுவத்தி ஏந்தி கண்டனங்களை பதிவு செய்தனர்.
நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டம், 2019 (சிஏஏ) செயல்படுத்துவதற்கான விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து ஆவணமற்ற முஸ்லீம் அல்லாத குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்க வழி வகுத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்படி ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் இருந்து சில மத சமூகங்களைச் சேர்ந்த வெளிநாட்டு சட்ட விரோத குடியேற்றக்காரர்களை இந்திய குடியுரிமைக்கு தகுதியுடையவர்களாக மாற்ற முற்படுவதாக என்று PRS சட்ட ஆராய்ச்சி கூறுகிறது.

ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்தும் சட்ட விரோதமாக குடியேறுபவர்களின் குறிப்பிட்ட வகுப்பினர் சட்டவிரோதமாக குடியேறியவர்களாகக் கருதப்பட மாட்டார்கள்.
CAA சட்டத்தை ரத்து செய்ய கோரி கோவை மத்திய மாவட்ட SDPI கட்சியின் சார்பாக உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பாக “மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது. அந்த கட்சியின் மாவட்ட துணைதலைவர் அப்துல் ரஹிம் தலைமையில் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் முஸ்தபா, பொது செயலாளர் அப்துல் காதர், அபுத்தஹிர் மாநில பேச்சாளர், தொழிற்சங்க மாநில பொது செயலாளர் ரவூப் நிஸ்தார், செயலாளர் இசாக், மாநில செயற்க்குழு உறுப்பினர் சிவக்குமார், பொருளாளர் இக்பால், தொழிற்சங்க மாவட்ட தலைவர் செய்யது இப்றாஹிம், உள்ளிட்ட மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் தொழிற்சங்க நிர்வாகிகள்,

வர்த்தக அணி நிர்வாகிகள், விமன் இந்தியா மூவ்மென்ட் சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உட்பட கட்சியின் செயல்வீரர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஜனநாயக முற்போக்கு சிந்தனைவாதிகள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதில் அப்பகுதியில் நெடுகிலும் நின்று CAA சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கையில் மெழுகுவத்தி ஏந்தி கண்டனங்களை பதிவு செய்தனர்.