திருவள்ளூரில் சாலைகளை சீரமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து விரைவில் முற்றுகை போராட்டம்

3 Min Read
பூண்டி ஊராட்சி ஒன்றியம்

திருவள்ளூர் அருகே சிதிலமடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி அதிகாரியின் காலில் விழுந்த பொதுமக்களால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .

- Advertisement -
Ad imageAd image

10ஆண்டுகளாக சிதிலமடைந்துள்ள சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட , பூண்டி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் இன்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது . இந்த கூட்டத்தின் போது பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம சாலைகளை சீரமைக்க கடந்த 4 மாதங்களுக்கு மேலாக டெண்டர் ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் , ஒப்பந்த அடிப்படையில் ஆன பணிகளை ஒதுக்குவதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் அலட்சியம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டி ஒன்றிய கவுன்சிலர்களின் கூட்டத்தை அனைத்து கவுன்சிலர்களும் புறக்கணித்தது வெளிநடப்பு செய்தனர்.

கூழாங்கற்கள் மற்றும் பாறைகள் உள்ள சாலை

இந்நிலையில் ஒன்றிய கவுன்சிலர்களை சமாதானப்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்ட திட்டஇயக்குனரும், கூடுதல் ஆட்சியருமான சுகபுத்திரா, பூண்டி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று ஒன்றிய குழு தலைவர் துணைத் தலைவர் கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடத்தினார் . பின்னர் பொது மக்கள் கூடுதல் ஆட்சியர் சுகபுத்திராவிடம் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தனர் . அப்பொழுது கிராமமக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல சாலைகள் சீரமைக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளதை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சுட்டிக்காட்டினார் .

மேலும் ஒன்றிய அலுவலகம் ஒட்டி செல்லும் சாலையிலேயே பல பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படாமல் உள்ள அவல நிலையை அதிகாரியிடம் தெரிவித்தனர் . இந்த சாலைகள் முழுவதும் கூழாங்கற்கள் மற்றும் பெரிய பாறைகள் நிறைந்த பகுதியாக காணப்படுவதாகவும் தெரிவித்தனர் .

அரசு உயர் அதிகாரிகள்

பொதுமக்கள் கூடுதல் ஆட்சியரிடம் புகார்களை தெரிவித்து கொண்டு இருக்கும் வேலையில் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம மக்கள் சிலர் , கூடுதல் ஆட்சியர் சுகபுத்ராவின் காலில் விழுந்து சாலையின் அவல நிலையை பார்வையிட்டு சாலையை சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

பொதுமக்களை சமாதான படுத்திய திட்ட அலுவுலர் சுகபுத்ரா அவர்களின் கோரிக்கையை ஏற்று சிதிலமடைந்த சாலைகளை நேரில் வந்து பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் .

எனினும் சாலையை பார்வையிட சென்ற கூடுதல் ஆட்சியர் காரை விட்டு இறங்காமல் ,காரில் அமர்த்தபடியே பார்வையிட்டு சென்ற செயல் கிராம மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது .

அரசு உயர் அதிகாரிகள்

அரசியல் கட்சி பிரதிநிதிகள் தொடங்கி அரசு உயர் அதிகாரி வரை அலட்சியம் காட்டி வருவதால் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ள பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம மக்கள் , ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் திட்ட இயக்குனருக்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்த இருப்பதாகவும் . இது தொடர்பாக விரைவில் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட அணைத்து கிராம மக்களையும் ஒன்றிணைத்து விரைவில் ஆலோசானை கூட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக தி நியூஸ் கலெக்ட் செய்தி இணையத்திடம் பேசிய கிராம மக்கள் சிலர் , அலட்சியமாக செயல்படும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் திட்ட அலுவலருக்கு எதிராக விரைவில் சுவரொட்டிகள் அச்சிட போவதாகவும் . அதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் . பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம மக்களை ஒன்றிணைத்து வட்டார வளர்ச்சி அலுவுலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்தனர் .

Share This Article
Leave a review