கோவையில் வயிற்று வலி ஏற்பட்டு 6 வயது பள்ளி சிறுமி உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த ராஜாமணி, புவனேஸ்வரி தம்பதியின் 6 வயது மகள் தியா ஸ்ரீ. அப்போது ஐயர் லே அவுட் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். அப்போது தியா ஸ்ரீ கடந்த 5 ஆம் தேதி இரவு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.

பின்னர் பெற்றோர் முதலுதவி சிகிச்சையாக ஓம வாட்டர் கொடுத்தனர். பின்னர் பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அன்றைய தினம் இரவே கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அப்போது உடல்நிலை மோசமான சூழலில் சிகிச்சையில் இருந்த தியா ஸ்ரீ-க்கு வயிற்றில் பெரிய கட்டி இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் 2 நாட்கள் மருத்துவமனையில் இருந்த சிறுமி நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர்ழந்தார்.

தனது குழந்தை உயிரிழப்பில் சந்தேகம் இல்லை என தெரிவித்துள்ள பெற்றோர், அதே சமயம் மருத்துவ ரீதியிலான காரணங்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் தங்கள் மகள் பள்ளியில் கொடுக்கும் இரும்பு சல்பேட் & ஃபோலிக் அமிலம் மாத்திரைகளை உட்கொண்டு வந்தார் என்ற தகவலையும் தெரிவித்து இருக்கின்றனர்.

சிறுமி உயிரிழப்பு தொடர்பாக சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த உயிரிழந்த சம்பவம் பெரும் சொகத்தை ஏற்படுத்தி உள்ளது.