2வடமாநிலத்தவர்கள் உட்பட 8பேர் கைது.! தனியார் தொழிற்சாலையில் கைவரிசை.!

1 Min Read
கைது செய்யப்பட்ட இருவர்

ஒசூர் அருகே தனியார் தொழிற்சாலையில் 10லட்சம் ரூபாய் மதிப்பிலான கனரக வாகன என்ஜின் உதிரி பாகங்களை திருடிய 3 சிறுவர்கள், 2வடமாநிலத்தவர்கள் உட்பட 8பேர் கைது.

- Advertisement -
Ad imageAd image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த மோரணப்பள்ளி கிராமத்தில்,  DMW cnc solution indian private pl ltd என்கிற கனரக வாகன என்ஜின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதிரிபாகங்கள்,லேப்டாப்,ஏசி உள்ளிட்டவை திருடப்பட்டதாக அட்கோ காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இன்ஸ்பெக்டர் பத்மாவதி  தலைமையில் எஸ்ஐ சபரிவேலன் உள்ளிட்ட தனிப்படை போலிசார் மேற்க்கொண்ட விசாரணையில், அதே ஊரில் வசித்து வந்த வடமாநிலத்தவர்களான சந்தீப்(34), சுபத்(26), தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பழனி(42), ஒசூர் பகுதியை சேர்ந்த சிவராஜ்(20), சுனில்குமார்(19) மற்றும் 3 சிறுவர்கள் உள்ளிட்டோர் உதிரி பாக பொருட்கள், லேப்டாப், ஏசி ஆகியவற்றை திருடியதுடன் மோரணப்பள்ளி என்னும் கிராமத்தில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதை மோப்பம் பிடித்த போலீஸார் அந்த இடத்திற்க்கு விரைந்து சென்று 8 பேரை கைது செய்த அட்கோ போலிஸார், அவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பழனி என்பவரே திருடிவந்த பொருட்களை வாங்கும் ஸ்கிராப் கடை நடத்தி வந்து இவர்களை ஊக்குவித்தது தெரியவந்துள்ளது.

Share This Article

Leave a Reply