“மாஸான ரவுடிக்கு மாவு கட்டு போட்ட காவல் துறை”

0
69
ரவுடி வசூர் ராஜா

நாளைக்கு வருவோம் 5 லட்சத்தை தயார் செய்து வை இல்லையெனில் உன்னையும் உன் குடும்பத்தையும் கொன்று விடுவோம் எனக் கூறி ரொக்க பணம் 20-ஆயிரத்தை பறித்து சென்ற பிரபல ரவுடி.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் பெயிண்ட் கடை வைத்து நடத்தி வரும் ஓ.எஸ்.பாஷா. இவர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், என்னை ஒன்பது மாதங்களுக்கு முன் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு தான் வசூரை சேர்ந்த ராஜா பேசுவதாகவும் எனக்கு மூன்று லட்சம் ரூபாயை தர வேண்டும் இல்லை எனில் தன்னையும் தனது குடும்பத்தாரையும் கொன்று விடுவதாகவும் கூறி மிரட்டி உள்ளார்.


இந்நிலையில் கடந்த 27-ஆம் தேதி பாஷா மற்றும் அவரது கடையில் வேலை பார்க்கும் சலீம் ஆகிய இருவரும் ஷூ கம்பெனிக்கு சென்று கொண்டிருக்கும்போது அவர்களைப் பின் தொடர்ந்து காரில் வந்த வசூர் ராஜா மற்றும் ஓட்டுநர் வெங்கடேசன் இருவரும் பாட்ஷா மற்றும் சலிமை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி நாளை உன் கடைக்கு வருவேன் 5 லட்சம் பணத்தை தயார் செய்துவை இல்லையெனில் உன்னையும் உன் குடும்பத்தாரையும் கொன்று விடுவதாக மிரட்டி விட்டு சென்றதாகவும்.

மேலும் தான் வைத்திருந்த 20,000 ரூபாய் ரொக்க பணத்தை பறித்துக் கொண்டு மீண்டும் நாளை வருவோம் பணத்தை தயார் செய்து வை என மிரட்டி சென்றுள்ளனர்.

யார் இந்த வசூர் ராஜா ?


வேலூர் சத்துவாச்சாரி அருகேயுள்ள புதுவசூரைச் சேர்ந்தவர் ராஜா என்கிற வசூர் ராஜா வயது 37. வசூர் ராஜா மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உட்பட 40-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. ஏழு முறைக்கு மேலாக  குண்டர் சட்டமும் பாய்ந்திருக்கிறது. பல  கொலை வழக்குகளில் தொடர்புடைய வசூர் ராஜா போலீஸ் என்கவுன்டருக்கு பயந்து கடந்த 2018 ஆம் ஆண்டில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் தான் இனி குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்றும் தனக்கு பொது மன்னிப்பு வழங்ககோரியும் மனு அளித்தார்.

பிறகு சிறிது காலம் ரௌடிசத்தை விட்டு பாலாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டார் . அவனை தொடர்ந்து கண்காணித்து வந்த ரவுடிகள்  தடுப்பு பிரிவு காவல் துறையினர் அவரை மணல் கொள்ளை வழக்கிலும் கைது செய்தனர் .

2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 29-ம் தேதி, மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில்,  காரில் வந்த ரௌடிக் கும்பல் சுங்க கட்டணம் செலுத்த மறுத்து, அங்கிருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. அந்தச் சம்பவத்தில், கைதுசெய்யப்பட்ட ஆறு ரௌடிகளில் வசூர் ராஜாவும் ஒருவர்.

அதுவரை வேலூரில் மட்டுமே வசூர் ராஜாவுக்கு பவர் இருப்பதாக நினைத்திருந்த காவல் துறையினருக்கு ஒரு பேர் அதிர்ச்சி  காத்திருந்தது , ஆம்  மதுரையில் அவர் சிக்கிய பின்னரே, தமிழகம் முழுவதுமுள்ள கூலிப்படை தலைவர்கள் மற்றும் காங்ஸ்டர்களுடன் வசூர் ராஜாவுக்குத் தொடர்பிருப்பதும் வெளிச்சத்துக்குவந்தது.

சில வருடங்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்த ரவுடி வசூர் ராஜா இந்நிலையில் தான் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் பெயிண்ட் கடை வைத்து நடத்தி வரும் ஓ.எஸ்.பாஷாவிற்கு கொலை மிரட்டல் கொடுத்துள்ளார் .

இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில், குற்றவாளிகளை பிடிக்க வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதனை அடுத்து எஸ்பி தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி வசூர் ராஜா மற்றும் அவனது கூட்டாளி வெங்கடேசன் ஆகிய இருவரை பொறிவைத்து கைது செய்த காவல்துறை அதிகாரிகள் , பிரபல ரவுடி வசூர் ராஜாவுக்கு மாவுக்கட்டு போட்டு  வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here