ஒரு வித்தியாசமான சபலகாரன் சிக்கி உள்ளார். இவர் செய்த காரியத்தை எல்லாம் பார்த்து, நம்முடைய சென்னை போலீசார் அதிர்ந்து போயிருக்கிறார்கள். யார் அந்த ஆசாமி?
கடந்த சில மாத காலமாகவே சென்னை போலீசுக்கு, பாலியல் புகார்கள் வந்து கொண்டேயிருந்தன, பாதிக்க பட்டவர்கள் தங்களது புகாரில் – ரோட்டில் யாராவது பெண்கள் போனால், அவர்களை சீண்டிவிடுவாராம் அந்த சபலிஸ்ட். அதுவும், டி-ஷர்ட் போட்டுக்கொண்டு, ஜாக்கிங், வாங்கிங் போகும் பெண்களையே அந்த நபர் பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றி வந்துள்ளார். இதற்காகவே விடிகாலையில் அலாரம் வைத்து எழுந்து கொள்வாராம். இளம்பெண்கள் எங்கு வாக்கிங், ஜாக்கிங் செய்கிறார்களோ அங்கே கரெக்ட் நேரத்தில் ஆஜர் ஆகிவிடுவார்.
மேடவாக்கம்:
கடந்த சில நாட்களுக்கு முன்புகூட, மேடவாக்கம் பகுதியில் இப்படி ஒரு இளைஞர், பாலியல் தொல்லை தருவதாக புகார்கள் வரவும், போலீசார் அலர்ட் ஆனார்கள். அதன்படி, மேடவாக்கம் மேம்பாலத்தில், டி.சர்ட் அணிந்தபடி ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம் பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அந்த நபரை கைது செய்தனர். இதற்கு பிறகு இந்த விவகாரம் முடிவுக்கு வரும் என்று பார்த்தால், அதிகரிக்கவே செய்தது. சென்னை மாநகரில், தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம்
தொடர்ச்சியாக நடந்து வந்துள்ளது. ஆனால், டைமிங் மாறியது.
வடசென்னை:
அதாவது வட சென்னை பகுதியான எம்.கே.பி. நகர், வியாசர்பாடி, பெரம்பூர், கொடுங்கையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் இளம் பெண்களை
பின்தொடர்ந்து சென்று பாலியல் சீண்டல் சம்பவங்கள் அதிகரித்தன.
எதிரே யாராவது இளம்பெண்கள் தனியாக வந்தால், அவர்களையும் சீண்டி கதறவிட்டுள்ளார் ஒரு இளைஞர். அந்த நபர் யார் என்று தெரியவில்லை. பைக்கில்தான் வருவாராம். எதிரே பெண்களை பார்த்துவிட்டால், உடனே பைக்கின் வேகத்தை குறைத்துவிடுவாராம்.
அவர்கள் கிட்ட போய் பைக்கை நிறுத்தி, தன் லீலைகளை ஆரம்பிப்பாராம். பெண்களின் உடலை எப்படியாவது தொட்டுவிட வேண்டும் என்பதே அந்த நபரின் நோக்கமாக இருந்துள்ளது. எனவே, பெண்களின் உடலை தொட்டு பார்த்து விட்டு, அடுத்த செகண்டே பைக்கை கிளப்பிக் கொண்டு பறப்பாராம்.
எனினும் அந்த நபர் யாரென்று தெரியவேயில்லை. இப்படித்தான், எம்கேபி நகர் 14-வது அவென்யூ பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது. நைட் 7 மணி இருக்கும், அப்போது ஒரு நடுத்தர வயதை சேர்ந்த பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மழையும் அதிகமாக பெய்து கொண்டிருந்தது. அந்த பெண்ணே தட்டுத்தடுமாறி நடந்து கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து, அந்த ஆபாச சைக்கோ வந்துவிட்டார். எதிர்திசையில் பைக்கில் வந்த அந்த இளைஞர், பெண்ணின் மார்பில் கைவைத்து, பாலியல் சீண்டலும் செய்துள்ளார். இதனை கொஞ்சமும் எதிர்பாராத அந்த பெண், அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனார். ஒருவேளை செயினை பறிப்பதற்காகவே அந்த இளைஞர் அவ்வாறு முயற்சித்திருக்கலாம் என்று அந்த பெண் நினைத்தார்.
அநாகரீகம்:
ஆனாலும் திரும்ப திரும்ப அந்த நபர் பெண்ணின் மார்பகத்தை தொட்டு அநாகரீகமாக நடந்து கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த நபர் செயினை பறிக்க முயற்சிக்கவில்லை என்பது தெரிந்தது.இதையடுத்து, அந்தெ பெண், எம்கேபிநகர் போலீஸில் புகார் தந்தார்.
இப்படித்தான் ஒரு சட்டக்கல்லூரி மாணவி ஒருவரின் பின்பகுதியில் தொட்டு பார்த்துவிட்டு, பைக் ஆசாமி தப்பித்து சென்றிருக்கிறான்.
இது தொடர்பாகவும் எம்கேபி நகர் போலீசுக்கு போனது. எல்லாருமே ஒரேமாதிரியான புகார்களை கொண்டுவரவும், போலீசார் அதிர்ந்தனர். அந்த நபர் யார் என்பது மர்மமாகவே இருந்தது.
பிறகு இதற்காகவே தனிப்படையும் களமிறக்கப்பட்டது. எந்தெந்த பகுதிகளில் இருந்து புகார்கள் வந்ததோ, அந்த பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர், நைட் நேரங்களில் மட்டுமே பைக்கில் சென்று இழிவான காரியத்தை செய்வதை கண்டறிந்தனர்.
ஹெல்மெட்:
முகத்தை மறைக்க ஹெல்மட் அணிந்திருந்ததால், முகம் சரியாக தெரியவில்லை. அதேபோல, நைட் நேரத்தில் பைக்கில் வருவதால், பைக் நம்பர் தெளிவாக கேமராவில் தெரியவில்லை. அந்த பைக்கின் கடைசி நம்பர் 7 என்பது மட்டும் தெரியவந்தது. உடனே இந்த ஒரு க்ளூவை மட்டுமே வைத்து, போலீசார் ஆய்வை ஆரம்பித்தனர். எப்போதுமே அந்த நபர், வெள்ளை சட்டை + வெள்ளை பேண்ட் அணிந்துகொண்டுதான் வந்துள்ளார். இதையும் வைத்து, விசாரணையை தீவிரப்படுத்தினர். இறுதியில் வசமாக சிக்கினார் அந்த சைக்கோ பேர்வழி. அவர் பெயர் பிரகாஷ் என்பது தெரியவந்தது. அதிரடியாக போலீசார் அவரை கைது செய்தனர்.
அதற்கு பிறகு பிரகாஷ் தந்த வாக்குமூலம் இருக்கே? அதுதான் ஹைலைட்.
வாக்குமூலம்:
“சார்.. நான் செய்தது தப்புதான். என்னை மன்னிச்சிடுங்க. சின்ன வயதில் இருந்தே பெண்கள் என்றால் எனக்கு தனிமோகம். நான் இதுவரைக்கும் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் இப்படி சீண்டியிருக்கிறேன். அடையாளம் தெரியாது என்பதற்காகவே இரவு நேரங்களில் சுற்றிவந்தேன்” என்பது உட்பட பல தகவல்களை அந்த வாக்குமூலத்தில் தந்துள்ளார்.அவரின் முழு விபரத்தை அறிய போலீசார் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே ஒரு சின்ன க்ளூவை மட்டுமே வைத்துக்கொண்டு, அந்த காமப்பேர்வழியை தட்டி தூக்கி, புழலில் வைத்துவிட்டனர் நம்முடைய சென்னை காவல்துறை.
சபாஷ் போலீஸ்..!!!