திருவாரூர் நீதிமன்றம் செல்லும் சாலையில் வீச்சு அரிவாளோடு இன்னோவா காரில் வந்த 4 ரவுடி கைது..!

2 Min Read

திருவாரூர் நீதிமன்றம் செல்லும் சாலையில் வீச்சு அரிவாளோடு டொயோட்டோ இன்னோவா காரில் வந்த இரு HS-ரௌடி உட்பட நான்கு நபர்கள் கைது. போலிசார் விசாரணை.

- Advertisement -
Ad imageAd image
ரவுடி

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் நீதிமன்ற வேலை நாட்களில், நீதிமன்ற பகுதியில் தொடர்ச்சியாக தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

ரவுடி

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து, திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் செல்லும் பகுதியில் திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பாரத நேரு மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. வைத்தியநாதன் ஆகியோர் வாகன தணிக்கை செய்த போது பயங்கர, அபாயகரமான ஆயுதத்தோடு டொயோட்டோ இன்னோவா காரில் வந்த 4 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

ரவுடி

மேலும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய பயங்கர ஆயுதத்தோடு டொயோட்டோ இன்னோவா காரில் வந்த வலங்கைமான் தாலுக்கா, அரவூர், தென்பாதி தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சேனா என்ற சேனாபதி வயது 29, வலங்கைமான் தாலுக்கா, தெற்கு பட்டம், நடுத்தெருவை சேர்ந்த குண்டு முத்து மகன் தினேஷ் வயது 24, கொரடாச்சேரி, 59-G சக்தி நகரை சேர்ந்த சாமுவேல் மகன் விக்டர் தேவராஜ் வயது 27, தேவங்குடி, 1/53 முத்து மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்த கண்ணதாசன் மகன் பாரதி செல்வம் வயது 28 ஆகிய 4 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ரவுடி

சேனா என்ற சேனாபதி மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் நீடாமங்கலம், நடேச தமிழார்வன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் ஆவார்கள். என்ன காரணத்திற்காக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய பயங்கர ஆயுதத்தோடு டொயோட்டோ இன்னோவா காரில் வந்தார்கள், ஏதேனும் அசம்பாவித செயலில் ஈடுபடும் திட்டத்தோடு வந்தார்களா, இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தொடரந்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருவாரூர் நீதிமன்றம் செல்லும் சாலையில் வீச்சு அரிவாளோடு இன்னோவா காரில் வந்த 4 ரவுடி

அப்போது சிறப்பாக செயல்பட்டு மேற்படி நபர்களை கைது செய்த திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பாரத நேரு மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வைத்தியநாதன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார்,M.Sc,(Agri.,) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

திருவாரூர் நீதிமன்றம் செல்லும் சாலையில் வீச்சு அரிவாளோடு இன்னோவா காரில் வந்த 4 ரவுடி கைது

இது போன்று பிறர் உயிருக்கு தீங்கு ஏற்படும் வகையில் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri.) கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

Share This Article
Leave a review