அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளில் வழக்கு !

2 Min Read
எடப்பாடி பழனிசாமி

வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்திருப்பதாக, அதிமுக பொது செயலாளர் மற்றும் எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

நடந்து முடிந்த  2021 சட்டமன்றத்தேர்தலில் அதிமுக கட்சி சார்பில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி, அவர் தாக்கல் செய்த  வேட்புமனு மற்றும் சொத்து பிரமாண பத்திரத்தில் பல்வேறு முக்கிய தகவல்களை மறைத்து உண்மைக்கு புறம்பான தகவல்களை  தெரிவித்துள்ளதால், அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தேனி மாவட்டம் உத்தம பாளையத்தைச்சேர்ந்த மிலானி என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டில்  சேலம் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடர்ந்தார்.

இந்தவழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்த புகார் மனுமீது  விசாரணைநடத்தி, இதில் உண்மையிருக்கும் பட்சத்தில் வழக்கு பதிந்து விசாரணை நடத்த அனுமதி அளித்திருந்தது .

மேலும் சேலம் குற்றப்பிரிவு காவல்துறையினர்  மே26-ம் தேதிக்குள் வழக்கு பதிந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது .
இந்நிலையில் சேலம் நீதிமன்றத்தின் உத்தரவை தடை செய்ய கோரிஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி  பழனிச்சாமிசென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையிடுசெய்திருந்தார் .

இந்த மேல்முறையிட்டு மனுவில் , தான் தேர்தலில் தாக்கல்செய்த வேட்பு மனுவில் எந்தஒரு தவறான தகவலும் இல்லை என்றும் மேலும் இது குறித்து வழக்குதொடர மிலானி எடப்பாடி தொகுதியை சார்ந்தவரோ அல்லது அந்த தொகுதியில் போட்டியிட்டவரோ கிடையாது என்று தெரிவித்து , அவரது மனுவை தள்ளுபடி செய்யும்படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியிருந்தார் .

இந்நிலையில்இந்த மனு நேற்று நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் மே 26-ம் தேதிக்குள் விசாரணைநடத்தி முடிக்க வேண்டுமென நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சேலம் மத்திய குற்றப்பிரிவில்  எடப்பாடி பழனிசாமி மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட பிரிவு  125எ (1), 125ஏ(I), 125ஏ(II) ஆகிய   மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Share This Article
Leave a review