விக்கிரவாண்டி நவம்பர் 11ம் தேதி பெரியதச்சூரில் பெருமாள் கோவிலில் 3 சாமி சிலைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா பெரியதச்சூரில் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் அர்ச்சகராக நரசிம்மன் வயது (78) என்பது உள்ளார். நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு அர்ச்சகரின் தம்பி நடராஜன் வயது (74) என்பவர் கோவிலின் கருவறையின் கதவையை பூட்டு போட்டு, பூட்டாமல் சாத்தி வைத்து, வெளிப்புற கதவையை மட்டும் பூட்டிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5:30 மணிக்கு அர்ச்சகர்கள் நரசிம்மன் பூஜை செய்ய கோவிலுக்கு சென்றார். அப்போது கோவில் கருவறையின் கதவை திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோவில் கருவறைக்குள் வைக்கப்பட்டிருந்த நடராஜர், லட்சுமி, நரசிம்மர் பெருமாள், லட்சுமி, ஆண்டாள் ஆகிய 5 வெண்கல சிலைகளில் 2 சிலைகள் மட்டுமே அங்கு இருந்தன. பெருமாள், லட்சுமி, ஆண்டாள் ஆகிய சாமி சிலைகள் திருடு போயிருந்தது.
90 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள் ஒவ்வொன்றும் 1 1\2 அடி உயரம் கொண்டவை ஆகும். இது பற்றிய அர்ச்சகர் நரசிம்மன் பெரியதச்சூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர் மருது, தடயவியல் நிபுணர் செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் ராக்கி வர வைக்கப்பட்டது. அது சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்து, விசாலம் பிடாரிப்பட்டு சாலையில் இருளர் குடியிருப்பு வழியாக சுமார் 1 1\2 கிலோ மீட்டர் தூரம் ஓடிப் போய் நின்றது.

ஆனால் யாரையும் கவி பிடிக்கவில்லை. கோவில் மதில்சுவர் வழியாக உள்ளே ஏறி குதித்து, மர்மநபர்கள் சிலைகளை திருடி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே நேரத்தில் கோவிலில் கருவறையின் கதவு பூட்டப்படாமல் இருப்பதே நோட்டமிட்ட மர்ம நபர்கள், இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து பெரியதச்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிலை திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.