கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் பேருந்தில் கேன் விழுந்து ஆசீட் பஸ்ஸில் பரவியதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு 18 பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் நலம் விசாரித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் செயல்பட்டு வரும் பாரதி பாலமந்திர் என்னும் தனியார் பள்ளியில் 18 பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு தனியார் பள்ளி பேருந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்த நிலையில் அந்த பேருந்தில் கேனில் ஆசீட் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த தனியார் பள்ளி பேருந்து சின்னசேலம் அம்சாகுளம் பகுதியில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது பேருந்தில் இருந்த ஆசீட் கேன் கீழே விழுந்து பேருந்துக்குள் ஆசிட் பரவியதால் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது.

பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் பேருந்தில் இருந்த 18 பள்ளி மாணவ, மாணவிகளும் அடுத்தடுத்து வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயக்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து 18 பள்ளி மாணவ, மாணவிகளும் சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவலறிந்த சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், ஒன்றிய குழு துணை தலைவர் அன்பு மணிமாறன் மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து தொடர்ந்து மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.